அபர்ணா பாலமுரளி

இந்திய திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி

அபர்ணா பாலமுரளி (Aparna Balamurali) இவர் மலையாளத் திரைப்படம் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் இந்திய திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் (2016) என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே (2017) என்பதில் அனு என்ற பாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர்.[1][2][3]

அபர்ணா பாலமுரளி

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அபர்ணா இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்.[4] இவர் கே. பி. பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை பாலமுரளி பல இசைத் தொகுப்புகளை இயற்றிய ஒரு இசை இயக்குநர் ஆவார். ஒரு வழக்கறிஞரான இவரது தாயார் சோபா ஒரு சில மலையாள படங்களில் பின்னணி பாடகராகவும் பணியாற்றியுள்ளார். பாடகர்-இசையமைப்பாளர் கே. பி. உதயபானு அவரது தந்தைவழி பெரிய மாமாவார்..

அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்தார் .

குறிப்புகள்

தொகு
  1. "Jimsy is quite like me". Timesofindia.indiatimes.com. Retrieved on 5 October 2018.
  2. ""Aparna Balamurali in Thrissivaperoor Kliptham"". Archived from the original on 19 October 2016. பார்க்கப்பட்ட நாள் 18 October 2016.
  3. quintdaily (11 August 2017). "Thrissivaperoor Kliptham Movie Review and Rating (3.5/5) – QuintDaily".
  4. അജിത് (12 January 2018). "ഇത് നിങ്ങളറിയാത്ത അപർണ ബാലമുരളി!" (in ml). மலையாள மனோரமா. https://www.manoramaonline.com/homestyle/spot-light/2018/01/10/aparna-balamurali-about-architecture-and-dream-home.html. பார்த்த நாள்: 25 August 2018. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்ணா_பாலமுரளி&oldid=4160824" இலிருந்து மீள்விக்கப்பட்டது