மோகினியாட்டம்

மோகினியாட்டம் என்பது தென் இந்திய மாநிலமான கேரளாவில் நடைபெறும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும்.[1] மோகினியாட்டம் தஞ்சை நால்வருள் ஒருவரான வடிவேலுவால் வளர்க்கப்பட்ட நடன வகை. பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்கள் மோகினியாட்டத்தில் காணக்கிடைக்கின்றன. மோகினி என்ற சொல் ஒரு அழகான பெண்ணென்றும், ஆட்டம் நடனம் என்றும் பொருள் படும். பாற்கடலிலிருந்து தோன்றிய அமிர்தத்தை விநியோகிக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய மோகினியே இந்த நடனக் கலையின் பெயருக்கு மூல காரணம் ஆகும். இது லாசிய நடனமாகும்.[1]

மோகினியாட்டம் ஆடும் பெண்

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. p. 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8.

மோகிணியாட்டம்சிறுகுறிப்பு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகினியாட்டம்&oldid=3645136" இலிருந்து மீள்விக்கப்பட்டது