வடிவேலு (நட்டுவனார்)

தஞ்சை வடிவேலு (1810–1845) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர் ஆவார். கோயிலில் இருந்த நாட்டியக் கலையை அரங்கக் கலையாக்கிய பெருமை கொண்ட தஞ்சை நால்வருள் இவரும் ஒருவராவார்.[1] இவர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். இவரே கேரளத்தில் ஆடப்படும் மோகினியாட்டத்தை உருவாக்கியவர்.

ஆரம்ப வாழ்க்கை தொகு

தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா (1763-1787) காலம் முதல் அவைக் கலைஞர்களாக இருந்து இசை, நாட்டியப் பணியினை ஆற்றி வந்தார்களின் மரபில் வந்தவர். தஞ்சை நாட்டிய ஆசிரியர் சுப்பராயனின் நான்காவது மகனானக வடிவேலு 1810 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் உடன் பிறந்தவர்களான பொன்னையா, சின்னையா, சிவானந்தம் ஆகியோரும் புகழ்வாய்ந்த நட்டுவாங்கனாராக விளங்கினர்.

இசைக் கல்வி தொகு

சகோதரர்கள் நால்வரும் முத்துசுவாமி தீட்சிதரிடம் இசை கற்றக, தஞ்சை சரபோஜி மன்னர் ஏற்பாடு செய்தார். இசைப் பயிற்சியோடு தமிழ், தெலுங்கு, வடமொழிகளிலும் பயிற்சி பெற்றனர். இச்சகோதரர்களின் இசை அரங்கேற்றம் மராட்டிய அரசவையில் சரபோஜி மன்னன் முன்பு நடைபெற்றது.

திருவாங்கூர் அரசவையில் தொகு

வடிவேலு திருவாங்கூர் மன்னரின் அரசவை வித்வானாக இருந்தார்.[2] அப்பொது கேரளத்தில் மோகினியாட்டம் என்னும் புதிய நடன முறையை அவர் உருவாக்கினார். மன்னரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மோகினி ஆட்டத்தில்தான் முதன்முறையாக கேரளத்தில் நடனத்தில் பெண்கள் பங்கேற்கும் புதிய மரபும், திருப்பம் உண்டானது. அதுவரை ஆண்கள் மட்டும் ஆடிவந்த கதகளி ஆட்டமே கேரளத்தின் பாரம்பரிய நடனமாக இருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "தஞ்சை நால்வர் வழி நாட்டிய இசை மரபு". புத்தக அறிமுகம். தமிழ்ப் பல்கலைக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2017.
  2. "தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்". தமிழ்க் கலைக்களஞ்சியம். தமிழ் வளர்ச்சித்துறை. அணுகப்பட்டது 6 அக்டோபர் 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவேலு_(நட்டுவனார்)&oldid=2424982" இலிருந்து மீள்விக்கப்பட்டது