அபர்ணா பி மாரார்
அபர்ணா பி மாரார் (Aparna B. Marar) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு இளம் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் நடனக் கலைஞர், ஒருங்கிணைப்பாளர் , கல்வியாளர், நடன இயக்குனர் மற்றும் பாடகி என பன்முக சாதனைகளைப் படைத்துள்ளார். [1] இவர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் வயர்லெஸ் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற பொறியாளர் ஆவார். இவர் கேரள சங்கீத நடக அகாதமியின்- யுவ பிரதிபா விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின்- கலாத்திலகம் விருது, கலாச்சார அமைச்சின் தேசிய உதவித்தொகை உட்பட ஏராளமான கௌரவங்களைப் பெற்றுள்ளார். [2]
அபர்ணா பி மாரார் | |
---|---|
கேரளத்தின், திருச்சூர்ரில் கேரள சங்கீத நடக அகாமி- பிராந்திய அரங்கில் அபர்ணா பி மரார் உரை நிகழ்த்துகிறார் | |
பிறப்பு | அபர்ணா பலராம் இந்தியா, கேரளம், குருவாயூர் |
பணி | நடனக் கலைஞர்; கல்வியாளர்; அமைப்பாளர்; பாடகி |
ஒரு வழக்கமான கலைஞராகவும், கல்வியாளராகவும் இவர் தனது ஆடல் மற்றும் விரிவுரைகளுக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்கிறார். இவர் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் - ஐ. சி. சி. ஆர், மற்றும் அமெரிக்க நடன சிகிச்சை சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக செயல்படும் கலாபாரதி அறக்கட்டளையின் இயக்குநராகவும் உள்ளார். [3] இது ஒரு இலாப நோக்கற்ற கலாச்சார அமைப்பாகும். இந்த அமைப்பு தொடச்சியாக விழாக்கள், பட்டறைகள் மற்றும் நலத்திட்டங்களை ஏற்பாடு செய்கிறது. [4] [5] சமுதாயத்தின் நலனுக்கான கலை இயக்கங்களில் அபர்ணா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் வளர்ச்சி தாமதங்கள் குறித்த தேசிய நிறுவனத்தின் ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார். இந்த ஆய்வு நடவடிக்கைகளில் மெதுவான வளர்ச்சி கொண்ட குழந்தைகளுக்கு இந்திய பாரம்பரிய நடனத்தின் நுட்பங்களைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்கிறார். இவர் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் நடத்தப்படும் கலை பாராட்டு நிகழ்ச்சிகளில் தீவிரமாக கலந்துகொள்கிறார். [2] [6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅபர்ணா கேரளத்தின் கோவில் நகரமான குருவாயூரில் கப்பலின் தலைமை பொறியாளராக பணியாற்றிய பாலராம் கே. மாரருக்கும் ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ஸ்ரீலேகா பாலராம் இணையருக்கு மகளாக பிறந்தார். பொறியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தபின், தஞ்சாவூரின் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நுண்கலைகளில் (பரதநாட்டியம்) முதுகலைப் பட்டம் பெற்றார். [7] இவர் பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மாணவரும் ஆவார். அதில் இவர் தொழில்முனைவு செயல் நிர்வாகத்தை பயின்றார். இவர் கலை மற்றும் கல்வியாளர்களிடையே பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். அபர்ணா சர்வதேச பத்திரிகைகள் [8] மற்றும் தேசிய அளவிலான மாநாடுகளிலும் பல தொழில்நுட்ப ஆய்வறிக்கைகளை சமர்பித்து வெளியிட்டுள்ளார்.
கலை வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுஅபர்ணா தனது நான்கு வயதில் இருந்து நடனமாடத் தொடங்கப்பட்டார். இந்திய பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் மோகினியாட்டம் ஆகியவற்றின் பல்வேறு பாணிகளில் நாட்டின் முக்கிய குருக்களிடமிருந்து விரிவாக பயிற்சி பெற்றார். இவர் கலாமண்டலம் ஹேமாவதி [9] அவர்களிடம் மாணவியாக இணைந்து மோகினியாட்டம் பயின்றார். மேலும் இசைமணி ஆர். வித்யானந்த பாகவதரிடம் கருநாடக இசையைப் பயின்றார். [1] மற்றும் இந்துஸ்தானி இசையை ஸ்ரீ. விஜய் சுர்சன் அவர்களிடம் கற்றார்.
மெதுவான வளர்ச்சி கொண்ட குழந்தைகளுக்கான கலை ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார். உலகெங்கிலும் பட்டறைகள் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் நடன சிகிச்சைக்கு இவர் பரப்புரை செய்கிறார். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான கலாபாரதி அறக்கட்டளையின் பதாகையின் கீழ், இந்திய பாரம்பரிய கலைகளில் இளைஞர்கள் மேம்படு அடைவதற்காக அபர்ணா தொடர்ந்து விழாக்களை [10] ஏற்பாடு செய்கிறார். [4] [5] [11] [12] [13] இந்த அமைப்பானது "ஆசிரய நிதி" திட்டத்தின் மூலம் நாட்டின் மூத்த கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் சேவைகளையும் தொடங்கியுள்ளது.
அபர்ணா ஒரு பிரபலமான பின்னணி-கஜல் பாடகர் மற்றும் நடன இயக்குனர் ஆவார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
தொகு- கேரள சங்கீத நாடக அகாதமி 2010 இல் இவரின் மோகினியாட்டத்திற்காக "யுவ பிரதிபா விருது" அளித்தது [14]
- 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் "கலத்திலகம்" விருது [15]
- கோழிக்கோடு பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கலை விழாவில் 2009 மற்றும் 2010 இல் மோகினியாட்டம், பாரதந்தியம் ஆகியவற்றில் முதல் பரிசு பெற்றார்
- மோகினியாட்டத்திற்காக- 2009 இல் இந்திய அரசின் கலாச்சார அமைச்சினால் "இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை" வழங்கப்பட்டது. [16]
- திருப்பதியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய இளைஞர் விழா 2010 இன் போது நடந்த போட்டியியல் பாரம்பரிய நடனத்தில் வென்றார் [17]
- கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் பட்டியிலடப்பட்ட கலைஞர் [18]
- இந்தியாவின் தூர்தர்ஷனின் தரம்வாய்ந்த கலைஞர்
- அமெரிக்க நடன சிகிச்சை சங்கத்தின் இணை உறுப்பினர், 2014
- 2010 இல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மாணவர் குறை தீர்க்கும் குழுவின் உறுப்பினர்
- சர்வதேச நடன கவுன்சில் உறுப்பினர் - யுனெஸ்கோ, 2011
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Aparna Marar singing carnatic music video - Big News Live - Kerala Malayalam News, Cinema News, Tech News". Bignewslive.com. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ 2.0 2.1 G. S. Paul. "Healing through dance". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Kalbharathi Cultural Heritage India". Kalabharathi.in. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ 4.0 4.1 "When Kuchipudi, Kathak mesmerise audiences". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ 5.0 5.1 "Manorama Online - Kalabharathi Foundation celebrates World Dance Day". Manoramaonline.com. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Aparna: Exploring prospects of Dance Therapy". Bignewslive.in. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Sreekrishna college bags championship". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ V Krishnaveni. "IJCA - Beamforming for Direction-of-Arrival (DOA) Estimation-A Survey". International Journal of Computer Applications - IJCA. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Profile - Kalamandalam Kshemavathy - Padma Jayaraj". Narthaki.com. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "National Dance Music Festival commenced". Bignewslive.in. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Kalabharathi National Young Dance Festival 2013 - Kalabharathi Dance Festival Timings Schedule Venue - Kalabharathi Dance Festival Kerala". Justkerala.in. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Kalabharathi Young Dance & Music Fest 2014". Realmatch Online. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ Sidhardhan, Sanjith (1 July 2013). "Does Kerala have a new cultural capital?". Archived from the original on 18 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
- ↑ "Yuva Pratibha awards announced". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Sree Krishna College bags overall title". Newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Aparna B Marar Classical Dancer Profile". Thiraseela.com. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Thrissur girl wins national prize in classical dance". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Indian Council for Cultural Relations : Empanelment of Artistes : Revised Reference List (2012)" (PDF). Iccrindia.net. Archived from the original (PDF) on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.