அபாகா அருவி

அபாகா அருவி (Abaga Falls) என்பது பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் உள்ள இலிகன் நகரத்திற்கு தென்மேற்கே சுமார் 15 கி. மீ தொலைவில் குறிப்பாக பரங்கே அபாகா, பலோய் நகராட்சி, லனாவோ டெல் நோர்டே அருகே அமைந்துள்ள ஒரு அருவியும் சூழலியல் அமைப்புமாகும்.[1] அபாகா அருவியின் உயரமானது மிகவும் பிரபலமான மரியா கிறிஸ்டினா அருவியின் உயரத்தை விட இரு மடங்கு அதிகமாகும், இது இலிகன் நகரத்தின் அருகாமையில் அமைந்துள்ளது (பரங்கே மரியா கிறிஸ்ட்னா, பலோய் நகராட்சி). ஆகஸ் ஆற்றினால் பாயும் மரியா கிறிஸ்டினா அருவியைப் போலல்லாமல், அபாகா அருவியானது பல நிலத்தடி நீரூற்றுகளை நீர் ஆதாரங்களாகக் கொண்டதாகும். இந்த நீரூற்றுகள் பல துணை ஆறுகள் வழியாக அபாகா நீர்வரத்திற்கான உச்சிமுகட்டில் பாய்கின்றன.

மேலும் மிகவும் பிரபலமான மரியா கிறிஸ்டினா அருவியைப் போலல்லாமல், தற்போதைய நிலையில் வழக்கமாகப் பராமரிக்கப்படும் சாலைகள் இல்லாததாலும், அருவியின் அடிப்பகுதியை அடைய மிதமான அளவு நடை தேவைப்படுவதாலும்அபாகா அருவிக்கு மனிதர்கள் செல்வதற்கான அணுகல் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த அளவிலான மனித அணுகலுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பினும் காடழிப்பினையும் அதிக வேட்டை காரணமாக ஏற்படும் சேதத்தையும் இச்சூழலியல் அமைப்பால் பாதுகாக்க இயலவில்லை.

இந்தப் பெயர் செபுவானோ மொழி வார்த்தையான "அபாகா" என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம், இந்தச் சொல்லிற்கு "தோள்பட்டை" என்று பொருள்படும், இது குன்றின் வடிவம் மற்றும் உயரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

அபாகா அருவியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆச்சரியப்படத்தக்க விலங்குகள் வாழ்கின்றன. மிகவும் குறிப்பிடத்தக்கவற்றில், அழிந்து வரும் பிலிப்பைன் கழுகு ("குரங்கு உண்ணும் கழுகு" என்றும் பொதுவாக அழைக்கப்படும் பிடெகோபாகா ஜெஃபெரி), செம்பழுப்பு இருவாச்சி (புசெரோஸ் ஹைட்ரோகோராக்ஸ்) , பிலிப்பைன்ஸில் மட்டுமே காணப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் மாபெரும் தங்க-முடிசூட்டப்பட்ட பறக்கும் நரி (ஆசெரோடான் ஜுபடுஸ்), பிலிப்பைன் பறக்கும் லெமூர் (சைனோசெபாலஸ் வோலன்ஸ்) ஆகியவை அடங்கும். இவற்றில் பல விலங்குகள் மனித நடவடிக்கைகளால் அழிந்து போகும் நிலையில் உள்ளன அல்லது அவற்றின் வாழ்விடங்களை இழக்கும் அபாயத்தில் உள்ளன.

பாதுகாப்பு முயற்சிகள்

தொகு

அபாகா அருவிப் பகுதியை மனிதனால் உருவாக்கப்படுகின்ற மற்றும் இயற்கை இடர்களிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் தற்போது மிகக் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது.

அபாகா அருவியைக் காப்பாற்றுவோம் என்ற குழு என்பது ஒரு கீழ்நிலை வரைக்கும் செல்லக்கூடிய ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும், இது முன்னர் அபாகா அருவிப் பகுதியில் வாழ்ந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் குடியிருப்பாளரால் நிறுவப்பட்டது. இந்தக் குழு தற்போது அபாகா அருவியின் சூழலியல் அமைப்பின் தற்போதைய சுற்றுச்சூழல் நிலை குறித்து முடிந்தவரை தகவல்களைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Digital, Pixzel. "Bisita Iligan". Bisita Iligan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாகா_அருவி&oldid=4179396" இலிருந்து மீள்விக்கப்பட்டது