அபாத்து நியூக்ளியசு பேரங்காடி
அபாத்து நியூக்ளியசு பேரங்காடி (Abad Nucleus Mall) கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகமாகும். வளரும் புறநகர்ப் பகுதியான மரதுவில், திருப்புனித்துராவிற்கு அருகில் நகர மையத்திற்கு அருகில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொச்சியிலுள்ள பிரபலமான அபாத்து [1] கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு பேரங்காடி நிர்வகிக்கப்படுகிறது. 1.25 இலட்சம் மொத்த குத்தகை (சில்லறை) வருவாய் தரும் இடம் உட்பட மொத்தம் 2.3 லட்சம் சதுர அடியில் பேரங்காடி கட்டப்பட்டுள்ளது.[1][3] 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று 3 தளங்களில் பேரங்காடி திறக்கப்பட்டது.[2] இந்தியாவின் முதல் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமை அமைப்பு சான்றளிக்கப்பட்ட தங்கம் தரமதிப்பீடு செய்யப்பட்ட பேரங்காடி அபாத்து நியூக்ளியசு பேரங்காடியாகும்.[4] 2012 ஆம் ஆண்டிற்கான தென்னிந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிகத் திட்டப் பிரிவிலும் இப்பேரங்காடி விருது பெற்றது.
அபாத்து நியூக்ளியசு பேரங்காடி Abad Nucleus Mall | |
இருப்பிடம்: | கொச்சி, இந்தியா |
---|---|
அமைவிடம் | 9°56′22″N 76°19′52″E / 9.93944°N 76.33111°E |
முகவரி | தேசிய நெடுஞ்சாலை 85, மரது, கொச்சி |
திறப்பு நாள் | 2010 |
உருவாக்குநர் | அபாத்து கட்டுனர்கள் |
கட்டிடக் கலைஞர் | அபாத்து கட்டிடக் கலைஞர்கள் |
கடைகள் எண்ணிக்கை | 66 |
கூரை எண்ணிக்கை | 4 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 125,000 சதுர அடிகள் (11,600 m2)[1][2] |
தள எண்ணிக்கை | G + 3 |
வலைத்தளம் | nucleusmall |
பொழுதுபோக்கு அம்சங்கள்
தொகு- நவீன முறையில் இயக்கப்படும் 168 மற்றும் 132 இருக்கைகள் கொண்ட 2 திரை பல்காட்சி திரைகள்
- 7500 சதுர அடியில் விளையாட்டிட மண்டலம்.
- 24 இருக்கைகள் கொண்ட 6 பரிமாண திரையரங்கம். இந்தியாவில் இத்தகைய முதல் திரையரங்கு ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Green mall opens at Maradu". பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.
- ↑ 2.0 2.1 "For that plush shopping experience - The Hindu". தி இந்து.
- ↑ "Nucleus mall, Kochi to become operational in August'10". Archived from the original on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-09-17.
- ↑ "Nucleus Mall, Kochi to be operate from September'10 : Trade Kerala Article". Archived from the original on 7 November 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-09-17.