அபிசேக் ரகுராம்
அபிசேக் ரகுராம் (பிறப்பு: 1985) இந்திய கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1][2]
அபிசேக் ரகுராம் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 26, 1985 |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | செவ்விசைப் பாடகர் |
இசைத்துறையில் | 2001–நடப்பு |
வாழ்க்கை
தொகுஅபிசேக் கருநாடக இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். புகழ்பெற்ற மிருதங்க கலைஞர் சங்கீத கலாநிதி பாலக்காடு ஆர். ரகுவின் பேரனாவார். இவரது தாயார் வயலின் கலைஞர் லால்குடி செயராமனின் உறவினராவார். வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ் இவரது தாயாரின் உடன்பிறப்பாவார். தமது இளவயதிலேயே மிருதங்கத்தையும் கஞ்சிராவையும் கற்கத் துவங்கினார். பின்னாளில் செம்மங்குடி மரபைச் சார்ந்த பி. எஸ். நாராயணசாமியிடம் வாய்ப்பாட்டுக் கற்றுக் கொள்ளலானார்.
தமது ஏழாம் அகவையில், மழலை மேதை என்ற போட்டியில் மிருதங்க வாசிப்பிற்காக தங்கப் பதக்கம் பெற்றார். 1996இல் எஸ். பாலச்சந்தர் அறக்கட்டளை நடத்திய பல்லவி பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்றார்.[3] 2013இல் மியூசிக் அகாதெமியில் நடத்திய இவரது கச்சேரி இசை விமரிசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.[4]
விருதுகள்
தொகு- சங்கீத நாடக அகாதெமியின் உசுத்தாது பிசுமில்லா கான் யுவ புரசுக்கார், 2013
மேற்சான்றுகள்
தொகு- ↑ http://www.thehindu.com/arts/music/managing-time-is-prime/article1027192.ece
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/chen-downtown/brahmothsavam-at-ananthapadmanabhaswamy-temple/article4421782.ece
- ↑ http://www.thehindu.com/features/metroplus/the-heir-apparent/article4438720.ece
- ↑ தி இந்துவில் விமரிசனக் கட்டுரை