அபிதம்மாவதாரம்
அபிதம்மாவதாரம் என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தசமயப் பெரியோர்களுள் ஒருவரான புத்ததத்த தேரர் என்பவரால் பாலி மொழியில் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூலாசிரியர் புத்த சமயத்தை மேற்கொண்டு வாழ்ந்த ஒரு தமிழர். சோழ நாட்டு உறையூரில் பிறந்த இவர் காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம், காஞ்சிபுரம், ஸ்ரீலங்காவில் அநுராதபுரம் முதலிய இடங்களிலுள்ள புத்த விகாரங்களில் இருந்துள்ளார். புத்த சமயப் புனித நூலான திரிபிடகத்திலுள்ள அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போல அமைந்ததாகும். சோழ நாட்டையும், காவிரிப்பூம்பட்டினத்தையும் இந்நூல் சிறப்பித்து கூறுகிறது.[1]