அபின் சியாம் குப்தா
அபின் சியாம் குப்தா (Abhinn Shyam Gupta) (பிறப்பு: 2 அக்டோபர்1979, அலகாபாத்) இந்தியாவைச் சார்ந்த பூப்பந்தாட்ட வீரர். ஒற்றையர் பிரிவில் முன்னாள் தேசிய வெற்றி வீரர். இவர், அலகாபாத்தில் வசிக்கிறார். 2004ல் கோடை ஒலிம்பிக்கில், பூப்பந்தாட்டத்தில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடினார். 32வது ஆட்டத்தில் கொரியாவின், பார்க் டே- சாங்கிடம் தோற்றார்.[1]
இந்திய பூப்பந்தாட்டத்தில் குப்தாவின் பங்களிப்புக்காக அர்சுனா விருது வழங்கப்பட்டது.[2]
கல்வி மற்றும் வேலை
தொகுஅபின், அலகாபாத் பல்கலைகழகத்தில் பி.காம் பட்டத்தைப் பெற்றார். தற்போது, அலகாபாத், சுபேதார் முனையத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தில், துணை மேலாளராக பணியாற்றுகின்றார்.
சாதனைகள்
தொகுஅபின் 2004ல் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றார். சிறு, துணை இளைய, இளைய(இரு முறை) மற்றும் மூத்த(இரு முறை) ஆகிய வகை விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற ஒரே பூப்பந்தாட்ட வீரர் ஆவார்.
முக்கிய பங்கேற்பு
தொகு- பொது நலவாய விளையாட்டுக்கள், குலாலம்பூர் – 1998
- உலக முதன்மை ஆட்டம்-கோப்பன்கேகன் – 1999
- பிரஞ்சு சுப்பர் தொடர் 2001 - வெற்றியாளர்
- சிவில்லி – 2001
- மான்செச்டர் – 2002
- ஆசிய விளையாட்டுப் போட்டி-பூசான் – 2002
- பிர்மின்காம் – 2003
- உலக ஒலிம்பிக்-ஏதேன் ஒலிம்பிக் – 2004
- U.S.A. (உலக முதன்மைப் போட்டிக்குத் தேர்வு) – 2005
References
தொகு- ↑ "Abhinn Shyam Gupta". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ List of Arjuna Awardees