அபிராமி அம்மைப் பதிகம்

அபிராமி அம்மைப் பதிகம் என்னும் நூல் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) இயற்றியது. இந்நூலில் அபிராமித்தாயைப் போற்றி இரு பதிகங்கள் உள்ளன[1].

முதலாவது பதிகம் தொகு

காப்பு தொகு

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,
ஐங்கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு!

பதிகம் தொகு

இப்பதிகத்தில் மொத்தம் 11 பாடல்கள் பதினாறுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தத்தால் பாடபெற்றுள்ளது.

இரண்டாவது பதிகம் தொகு

இவ்விரண்டாவது பதிகத்திலும் 11 பாடல்கள் பதினான்குசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் பாடபெற்றுள்ளன.

எடுத்துக்காட்டு செய்யுள் தொகு

மிகையும் துரத்த, வெம்பிணி யும்துரத்த,
வெகுளி ஆனதும் துரத்த,
மிடியும் துரத்த, நைரதிரை யும்துரத்த,
மிகுவேத னைகளும் துரத்தப்,
பைகயும் துரத்த, வஞ்சைனயும் துரத்தப்,
பசியென்பதும் துரத்தப்,
பாவம் துரத்தப், பதிமோகம் துரத்தப்,
பலகா யமும்துரத்த,
நைகயும் துரத்த, ஊழ்வினையும் துரத்தஎன்
நாளும் துரத்த, வெகுவாய்
நாவறண்டு ஓடிக்கால் தளர்ந்திடும் என்னை
நமனும் துரத்து வானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!

(11-வது பாடல், முதல் பதிகம்)

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிராமி_அம்மைப்_பதிகம்&oldid=2470783" இலிருந்து மீள்விக்கப்பட்டது