அபிலீன் தோற்றமுரண்

(அபிலீன் முரண்படு மெய்மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அபிலீன் தோற்றமுரண் (Abilene paradox) என்பது ஒரு குழுவினர் கூட்டாக எடுக்கும் ஒரு முடிவு அந்தக் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு எதிராக அமையும் தோற்றமுரணின் (paradox) பெயராகும். குழுவின் சாய்வு தமது தனிப்பட்ட விருப்பத்தேர்விற்கு எதிராகவே உள்ளது என்ற தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்கத் தவறுதல் இத்தோற்றமுரணின் கூறாகும். இது பொதுவாகக் குழுக்களில் காணப்படும் தகவல் தொடர்புக் குறைபாடுகளினால் நேருகிறது.

எடுத்துக்காட்டு

தொகு

இம்மெய்மையை ஜெர்ரி ஹார்வே என்ற மேலாண்மை அறிஞர் தான் முதன்முதலாக அபிலீன் முரண்படு மெய்ம்மை மற்றும் மேலாண்மைமீது இன்னபிற எண்ணங்கள் என்ற தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டார்.[1] இம்மெய்மையின் பெயர் இவர் தனது கட்டுரையில் பயன்படுத்தியிருந்த எடுத்துக்காட்டிலிருந்து பெறப்பட்டது:

பகுப்பாய்வு

தொகு

இம்மெய்ப்பாடு குழுச்சிந்தனையின் ஓர் வெளிப்பாடாக இருக்கலாம். இதை சமுதாய ஒத்திசைவு மற்றும் சமுதாய அறிதிறன் போன்றவற்றைப் பற்றிய சமுதாய உளவியல் தேற்றங்களைக் கொண்டு விளக்க முடியும். இத்தேற்றங்களின்படி மனிதர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழுவின் போக்கிற்கு எதிராகச் செயல்படத் தயங்குகிறார்கள் என அறியப்படுகிறது. அதேபோல், மக்களின் கூற்றுக்கள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னால் மறைமுகக் குறிப்புகளும் நோக்கங்களும் பல்கியுள்ளதைக் காணலாம். இது பொதுவாக தனிநபர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துதற்கும் ஆவல்களைத் தொடர்வதற்கும் எதிராக அமையும் சமுதாய நிலவரங்களினால் ஏற்படுகிறது.

இக்கருத்துரு குழுச்சிந்தனைக் கருத்துருவுடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டுமே சமுதாயச் சூழலில் குழுக்களின் நடவடிக்கைகளைப் பற்றியவை. குழுக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மட்டுமல்ல, கருத்தொருமையைச் சமாளிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதை இது காட்டுகிறது. இக்கருத்துரு சமுதாயவியலில் உள்ள பிற தேற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல்வகைமை கொண்ட குழுக்களும் கருத்து தெரிவிக்கத் தயக்கமற்ற சூழலும் இவ்விளைவை ஓரளவு தவிர்க்கக் கூடும்.

இவ்வெடுத்துக்காட்டு நிகழ்வை ஒரு குறும்படமாகச் செய்து மேலாண்மைக் கல்விக்குப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குழுவமைத்து முடிவெடுத்தலின்போது நேரும் தவறான முடிவுகளை விளக்க இது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தவறுகள் நிகழாதிருக்க குழுவினர் முடிவெடுக்கும் தருவாயில் ஒருவரை ஒருவர் "நாம் அபிலீனுக்கு செல்கிறோமா?" என்று கேட்டுக் கொண்டால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வு வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. Harvey, Jerry B. (Summer 1974). "The Abilene Paradox and other Meditations on Management". Organizational Dynamics 3 (1). 
  • Harvey, Jerry B. (1988). The Abilene Paradox and Other Meditations on Management. Lexington, Mass: Lexington Books.
  • Harvey, Jerry B. (1999). How Come Every Time I Get Stabbed In The Back, My Fingerprints Are on The Knife?. San Francisco: Jossey-Bass.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிலீன்_தோற்றமுரண்&oldid=2740973" இலிருந்து மீள்விக்கப்பட்டது