அபி (கவிஞர்)
தமிழ்க் கவிஞர்
அபி என்ற பீ. மு. அபிபுல்லா (பிறப்பு: 1942) என்பவர் தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.[2] தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார்.[3] இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[1]
அபி | |
---|---|
பிறப்பு | 1942 போடிநாயக்கனூர், தேனி தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | பேராசிரியர், கவிஞர் |
பணியகம் | மேலூர் அரசுக் கலைக் கல்லூரி |
சமயம் | இசுலாம் |
பிள்ளைகள் | அஷ்ரப் அலி, ரியாஸ் அகமது, பர்வின் பாத்திமா[1] |
வலைத்தளம் | |
http://abikavithaiulagam.blogspot.com |
வாழ்க்கை
தொகுஇவர் 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பிறந்தார். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.[4] மேலூர் அரசுக் கலைக்கல்லூரில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவரது நூல்கள்
தொகு- மெளனத்தின் நாவுகள் (1974) - கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம்[5]
- அந்தர நடை (1978)
- என்ற ஒன்று (1987)
- அபி கவிதைகள் (2013) - கலைஞன் பதிப்பகம்
விருதுகள்
தொகு- 2004: கவிக்கோ விருது
- 2004: கவிக்கணம் விருது
- 2008: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது[1]
- 2011: சிற்பி இலக்கிய விருது[6]
- 2019: விஷ்ணுபுரம் விருது[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல !". தீராநதி. ஆகஸ்டு 2009. http://abikavithaiulagam.blogspot.com/2014/10/2009.html. பார்த்த நாள்: 30 July 2019.
- ↑ 2.0 2.1 "கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது". ஜெயமோகன். பார்க்கப்பட்ட நாள் 30 July 2019.
- ↑ 6.2 இக்காலச் செய்யுள் இலக்கியங்கள். த.இ.க.
- ↑ "கவிஞர் அபி – நேர்காணல்". சமரசம். ஜனவரி 2000. https://azhiyasudargal.wordpress.com/2013/04/10/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/. பார்த்த நாள்: 30 July 2019.
- ↑ "கவிஞர் மீரா". தென்றல். http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3212. பார்த்த நாள்: 30 July 2019.
- ↑ "சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் தேர்வு". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=273479. பார்த்த நாள்: 30 July 2019.