அபீப் ஓவியர்
அபீப் ஓவியர் (Habib Painter) அல்லது ஹபீப் ஓவியர் (1915-22 பிப்ரவரி 1987) என்பவர் இந்திய கவ்வாலி மற்றும் நாட்டுப்புற பாடகர் ஆவார். அபீப் பாயிண்டரின் நினைவாக அலிகரில் பான் வாலி கோத்திக்கு அருகில் புல்புலே ஹிந்த் அபீப் பாயிண்டர் பூங்கா எனப் பெயரிடப்பட்ட பூங்கா உள்ளது [1] [2]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅபீப் 1915ஆம் ஆண்டு அலிகரில் பிறந்து வளர்ந்தார்.[2] விளம்பரப் பலகை ஓவியராகத் தனது தொழிலைத் தொடங்கினார், இதனால் இவர் "அபீப் ஓவியர்" என்று அறியப்பட்டார். கவிதை வாசிப்பு நிகழ்வு (முஷைராக்கள்) ஒன்றில் ரைசு மிர்சா, அபீப் திறமையாக கவ்வாலி பாடுவதைப் பார்த்து, அபீப்பைத் தில்லிக்கு அழைத்து வந்து கவ்வாலி கலைஞராக அறிமுகப்படுத்தினார்.[2]
அபீப் ஓவியர்
தொகுஅபீப் ஓவியருக்கு நல்ல குரல் வளமும் மொழிப் புலமையும் நல்ல அறிவும் இருந்தது. அபீப் ஓவியர் இந்தியத் துணைக்கண்டத்தில் முக்கியமான கவ்வாலி கலைஞராகக் கருதப்படுகிறார்.[2]
இவர் சூஃபி துறவி நிஜாமுதீன் அவுலியா மற்றும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கவிஞர்/இசையமைப்பாளர் அமீர் குஸ்ரோ ஆகியோரின் ஆன்மீக சீடர் ஆவார்.[2][3]
இறப்பு
தொகுஅபீப் ஓவியர் 22 பிப்ரவரி 1987 அன்று தனது 72 வயதில் இறந்தார்.[2]
பட்டம்
தொகுஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போரின் போது, இந்தியக் கலைஞர்கள் தேசத்தை ஊக்குவிக்க தங்கள் ஆதரவினை தங்கள் கலையின் பங்களிப்பு மூலம் வழங்கினர். மேலும் அபீபும் படைவீரர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பாடல்களைப் பாடினார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு இவருக்கு "புல்புல்-இ-ஹிந்த்" (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.[2][4]
அபீப் ஓவியரின் நினைவாக அலிகாரில் பான் வாலி கோத்திக்கு அருகில் புல்புலே ஹிந்த் ஹபீப் ஓவியர் பூங்கா என்று பெயரிடப்பட்ட பூங்கா ஒன்று உள்ளது.
குறிப்பிடத்தக்க கவ்வாலி பாடல்கள்
தொகு- "வோ ஹர் ஜாரே மீ ஹை"
- "நாஸ் நாஸ் போலே நபீ நபீ"
- "பஹுத் கத்தின் ஹை தகர் பான் காட் கி" (பாடல் வரிகள்: அமீர் குஸ்ரோ ) [2] [3]
- "ஃபனா இட்னா தோ ஹோ ஜான்"
- "பாப் கி நசீஹத் பேட்டி கோ"
- "வோ சதா சக்கர் மே ரெஹ்தே ஹைன்"
- "ஞி மாலும் நிஹி மாலுன்"
- "கர் கா பேடி லங்கா தய்"
- "மாய் அப் குச் கே நி சக்தா"
- "கரே கோய் பரே கோய்"
- "யே மெரி ஹகீகத் ஹை"
- "கோஷிஷ் நா க்ரனா"
- "போஷிடா போஷிடா"
- "புரா கிஸ்கோ மனு"
- "கிட்னி ஜாலிம் ஹை துனியா"
- "பரோசா கிஸ் பே கிஜே கா"
- "பகவான் இசி மாய் மில்டே ஹை"
- "ரஞ்சித் ரஞ்சிதா"
- "தேதர் ஹோ ஜெய்"
- "ஆஜ் துனா மாய் எய்சா ஜலுங்கி"
- "மெயின் டு அன்வேர் நபி ஹூன்"
மேற்கோள்கள்
தொகு- ↑ R. V. Smith (3 August 2014). "Melody and imagery". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/melody-and-imagery/article6278222.ece.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Manish Gaekwad (24 May 2016). "Habib Painter: The billboard painter who became a famous qawwali singer". Scroll.in website. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
- ↑ 3.0 3.1 "Habib Painter". Last.fm. 18 April 2009. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
- ↑ Bulbulay Hind Habib Painter Park (Tikona Park) Google.com website, Retrieved 3 April 2022