அலிகர் (Aligarh, இந்தி: अलीगढ़), இந்தியாவின் வட மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓரு மாநகரமாகும். இது புது தில்லியிலிருந்து தென்கிழக்கே 90 மைல்கள் (140 km) தொலைவில் உள்ளது. அலிகர் மாவட்டம், அலிகர் கோட்டம் ஆகியவற்றின் தலைநகரான இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து இலட்சமாக உள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தினால் பெரும்பாலும் பல்கலைக்கழக நகரமாக அறியப்படுகிறது. இதனால் 'கல்வியின் மெக்கா ' எனவும் புகழ்பெற்றுள்ளது. பாக்கித்தானின் உருவாக்கத்திற்கு வித்திட்டவராகக் கருதப்படும் சேர் முகமது இக்பால் உட்பட பல அறிஞர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் தொடர்பு பெற்றுள்ளனர். அலிகார் பூட்டுத் தொழிலுக்கும் புகழ்பெற்றது; ஆகவே உள்ளூர் மக்கள் இதனை `பூட்டுக்கள் நகரம்' எனவும் அழைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 பெருநகர் பகுதிகளில் (அலிகார், ஆக்ரா, அலகாபாத், பரேலி, காசியாபாத், கோரக்பூர், ஜான்சி, கான்பூர்,லக்னோ, மொராதாபாத், மீரட், சாரங்பூர், வாரணாசி) இது ஒன்றாகும்.

அலிகர்

அலிகட், अलीगढ़

கல்வியின் மெக்கா, பூட்டுக்கள் நகரம்
—  நகரம்  —
அலிகர்
இருப்பிடம்: அலிகர்

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 27°53′N 78°05′E / 27.88°N 78.08°E / 27.88; 78.08
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
பிரிவு அலிகர்
மாவட்டம் அலிகார்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி அலிகர்
மக்கள் தொகை 967,732 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


178 மீட்டர்கள் (584 அடி)

குறியீடுகள்

புள்ளிவிவரங்கள் தொகு

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி[1] அலிகாரின் மக்கள்தொகை ஏறத்தாழ 1167732 ஆகும். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் ஆவர். தேசிய சராசரியான 65.4%ஐவிட படிப்பறிவு 71%ஆக உள்ளது; ஆண்கள் 79%உம் பெண்கள் 61%உம் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். மக்கள்தொகையில் 16% ஆறு வயதிற்கும் குறைவானவர்கள்.

மேற்கோள்கள் தொகு

http://www.whediatechnologies.com பரணிடப்பட்டது 2011-01-29 at the வந்தவழி இயந்திரம்

மேலும் அறிய தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகர்&oldid=3574760" இருந்து மீள்விக்கப்பட்டது