பரேலி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம்

பரேலி (Bareilly, இந்தி: बरेली, உருது: بریلی‎) வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் முகனையான நகரமாகும். ராம்கங்கா ஆற்றங்கரையில் ரோகில்காண்ட் என்ற புவியியல் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் பரேலி கோட்டத்தின் தலைநகருமாகும். மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து வடக்கே 252 கிலோமீட்டர்கள் (157 mi) தொலைவிலும் நாட்டுத் தலைநகர் புது தில்லியிலிருந்து கிழக்கே 250 கிலோமீட்டர்கள் (155 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.

பரேலி
बरेली
நகரம்
பரேலி நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பரேலி மாவட்டம்
அரசு
 • நா.உதிரு. பிரவீண் சிங் ஐரான் (இந்திய தேசிய காங்கிரசு)
 • ச.பே.உதிரு. ராஜேஷ் அகர்வால் (பாரதிய ஜனதா கட்சி)
 • நகரத்தந்தைதிருமதி சுப்ரியா ஐரான்
பரப்பளவு
 • மொத்தம்235 km2 (91 sq mi)
ஏற்றம்
81 m (266 ft)
மக்கள்தொகை
 (கணக்கெடுப்பு 2001)
 • மொத்தம்11,99,839
இனம்பரேலியர்
நேர வலயம்IST
பின்கோடு
2430xx
வாகனப் பதிவுUP-25

இந்த நகரம் பிரம்பு அறைகலன்களுக்குப் புகழ்பெற்றது. தவிர பருத்தி, தானியங்கள் மற்றும் சர்க்கரை வணிகத்தில் முதன்மை மையமாக உள்ளது. இப்பகுதியில் வணிகம், நிதி, பண்பாடு, கலை, ஆய்வு, கல்வி என பல்வேறுத் தளங்களிலும் இந்த நகரத்தின் தாக்கம் உள்ளது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 699,839 ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேலி&oldid=3219914" இலிருந்து மீள்விக்கப்பட்டது