அபுல் கலாம் ஆசாத் (பத்திரிகையாளர்)

வங்காளதேச பத்திரிகையாளர்

அபுல் கலாம் ஆசாத் (Abul Kalam Azad (journalist)) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். வங்காளதேசத்தின் தேசிய செய்தி நிறுவனமான வங்காளதேச சங்பாத் சங்சுதாவின் தற்போதைய நிர்வாக இயக்குனராகவும் தலைமை ஆசிரியராகவும் உள்ளார் [1] இங்கு நியமனம் பெறுவதற்கு முன்பு அபுல் கலாம் ஆசாத் வங்காளதேச பிரதமரின் செய்தி செயலாளராக பணியாற்றினார்.

அபுல் கலாம் ஆசாத்
Abul Kalam Azad (journalist)
முதன்மை செயல் அலுவலர், வங்கதேச சங்பாத் சங்சுதாவின் தலைமை தொகுப்பாசிரியர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 பிப்ரவரி 2014
வங்காளதேச பிரதமர் அலுவலகத்தின் செய்தி செயலாளர்
பதவியில்
2009 – 27 சனவரி 2014
பின்னவர்ஏ.கே.எம். சமீம் சவுத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்வங்காளதேசி
முன்னாள் கல்லூரிதாக்கா பல்கலைக்கழகம்
வேலைபத்திரிகையாளர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

முன்சிகஞ்சு மாவட்டத்தின் லோகாயங்கு துணை மாவட்டத்தில் அரிதியா கிராமத்தில் அபுல் கலாம் ஆசாத் பிறந்தார்.[2] இவரது தந்தையின் பெயர் அபிபூர் ரகுமான் சிக்தெர் என்பதாகும். டாக்கா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, ஆசாத் மாசுகோவில் பத்திரிகைத் துறையில் மேம்பட்ட பத்திரிகையியல் என்ற ஒரு பட்டயத்தைப் பெற்றார். [1] டாக்கா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, இவர் வங்காளதேச சத்ரா கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். கிழக்கு பாக்கித்தானில் 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சியின் போது ஆசாத் சர்பதலிய சத்ரா சங்ராம் பரிசத்தின் டாக்கா பிரிவு பொருளாளராக இருந்தார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Managing Director and Chief Editor's Profile". Bangladesh Sangbad Sangstha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
  2. (in bn)banglanews24.com. https://www.banglanews24.com/national/news/bd/265114.details.