அபோத் பன்து பகுனா

அபோத் பந்து பகுனா (Abodh Bandhu Bahuguna 15 ஜூன் 1927-2004), இந்தி மற்றும் கார்வால் எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் கட்டுரைகளுக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.

அபோத் பன்து பகுனா
பிறப்புசூன் 15, 1927
பௌரி கர்வால் மாவட்டம்
இறப்பு2004 (அகவை 76–77)
அறியப்படுவதுஇந்தி, கர்வாலி மொழி எழுத்தாளர், கவிஞர்

சுயசரிதை தொகு

பகுனா தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கர்வாலின் சலான்ச்யூன், பௌரி, ஜாலா கிராமத்தில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இந்தி மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை (எம்.ஏ) பட்டம் பெற்ற இவர், உத்தரபிரதேச அரசு அலுவலகராகப் பணியாற்றினார் மற்றும் இந்திய அரசின் துணை இயக்குநராக ஓய்வு பெற்றார். பகுனா ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். இவரது தொழில் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ந்து எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார். [1]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள் தொகு

கார்வாலி மொழி [1]
  • புமியால்
  • பார்வதி
  • கோல்
  • டெய்சாத்
  • காங்கிலா
  • காட்
  • மைடேகி கங்கை
  • ஷைல்வானி
இந்தி மொழி [1]
  • தட்கா ஹிருதயா
  • ஆரண்யா ரோடன்
  • சக்ராச்சல்
  • தூப்தா ஹுவா கான்

விருதுகள் தொகு

அபோத் பன்து பாகுனா உத்தரப்பிரதேச அரசிடமிருந்து 2 விருதுகளைப் பெற்றார்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Delhi: Sahitya Akademi. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8-1260-0873-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபோத்_பன்து_பகுனா&oldid=3094705" இலிருந்து மீள்விக்கப்பட்டது