அப்சராகொண்டா
அப்சராகொண்டா (Apsarakonda) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் வடகன்னட மாவட்டத்தில் உள்ள ஒன்னாவரா என்ற துறைமுக நகருக்கு அருகில் உள்ள ஒரு சுற்றுலா கிராமம் ஆகும். ஒன்னாவரா பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]
அப்சராகொண்டா
Apsarakonda ಅಪ್ಸರಕೊಂಡ | |
---|---|
Country | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
Region | கனரா |
மாவட்டம் | வட கன்னட மாவட்டம் |
Taluk | ஒன்னாவரா |
Languages | |
• Official | கன்னடம் |
பெயர்காரணம்
தொகுஅப்சராகொண்டா என்பதன் பொருள் தேவதைகள் குளம் என்பதாகும். கடற்கரையைப் பார்த்தபடி அக் குளம் இருப்பதானால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இங்கிருந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் ஓய்வெடுக்கவும் தேவதைகள் தேர்ந்தெடுத்த இடம் இப்பகுதியாகும் எனப் புராணக்கதைகள் கூறுகின்றன.[2]
சிறப்புகள்
தொகுமகா விநாயகர் கோயில் மற்றும் உக்ர நரசிம்மர் கோயில் ஆகிய கோயில்களுக்குப் பின்புறமாக அப்சராகொண்டா நீர்வீழ்ச்சி இருக்கிறது. மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பாண்டவர் குகைகள் இங்கிருப்பதாகக் கூறப்படுகின்றன. இக்குளத்திற்கு அருகில் பிரபலமடையாத கடற்கரைகள் உள்ளன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uttara Kannada Tourism". Archived from the original on 2015-06-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
- ↑ "Apsarakonda Falls, Honnavar – An Enchanting Destination". பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
- ↑ "Apsara Konda Beach".