அப்துல் காதிர் முல்லா
அப்துல் காதர் முல்லா (Abdul Quader Molla, வங்காள மொழி: আবদুল কাদের মোল্লা; 14 ஆகத்து 1948[4] – 12 டிசம்பர் 2013)[3] என்பவர் வங்கதேசத்தின் அரசியல்வாதி. 1971 வங்கதேச விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்ததாக இவர் குற்றம் சாட்டப்பட்டு,[5] 2013 டிசம்பர் 12 இல் தூக்கிலிடப்பட்டார்.[6] இவர் ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.[5][7]
அப்துல் காதர் முல்லா Abdul Quader Molla | |
---|---|
আবদুল কাদের মোল্লা | |
தாய்மொழியில் பெயர் | আবদুল কাদের মোল্লা |
பிறப்பு | அமிராபாது, பரித்பூர், கிழக்கு பாக்கிஸ்தான் (இன்றைய வங்காளதேசம்) | 14 ஆகத்து 1948
இறப்பு | 12 திசம்பர் 2013 சிற்றறைச் சிறை, வங்காளதேசம் | (அகவை 65)
இறப்பிற்கான காரணம் | தூக்கிலிடப்பட்டார் |
கல்லறை | பரித்பூர், வங்காளதேசம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாக்கா பல்கலைக்கழகம் |
பணி | ஊடகவியலாலர் |
பணியகம் | டெய்லி சங்ரம் பத்திரிகையின் நிருவாக ஆசிரியர் |
அமைப்பு(கள்) | ஜமாத்-இ-இசுலாமி |
அறியப்படுவது | அரசியல், ஊடகவியல் |
சமயம் | இசுலாம் |
குற்றச்செயல் | வங்கதேச விடுதலைப் போரில் வன்கலவி, மற்றும் இனப்படுகொலைகள். 344 பொதுமக்களைக் கொலை செய்தமை.[1][2] |
Criminal penalty | தூக்குத் தண்டனை[3] |
வாழ்க்கைத் துணை | சனோரா ஜகான் |
'த டெய்லி சங்கிரம்' என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1986 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் வங்காளதேசத் தேர்தலில் பரிதாபாத்-4 தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். வங்கதேச விடுதலைப் போரில் 344 பொதுமக்களைக் கொன்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செப்டம்பர் 17, 2013 அன்று வங்கதேச பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயம் இவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.[8] ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.[9] 2013 செப்டம்பர் 17 இல் வங்கதேச உச்சநீதிமன்றம் இவரது ஆயுள்தண்டனையை தூக்குத்தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தது.[10][11] வங்காளதேச விடுதலைப் போரில் போர்க்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்ட முதலாவது நபர் இவராவார்.
வாழ்க்கை
தொகுஇவர் 1948-ல் அமிராபாத் என்னும் கிராமத்தில் பிறந்தார். கிராமத்தில் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் 1966 முதல் 1968 வரை ராஜேந்திரா கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பு படித்தார். படிக்கும் போது ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் மாணவர் பிரிவில் சேர்ந்தார். பின்னர் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
தொகு1971-ல் ஜமாத்-இ-இசுலாமி தலைவர்கள் வங்கதேச விடுதலைப் போரை எதிர்த்தனர்.[5][12][13] வங்கதேசம் விடுதலை அடைந்த பின்னர் ஜமாத்-இ-இசுலாமி கட்சி தடை செய்யப்பட்டது. சேக் முஜிபுர் ரகுமானின் படுகொலைக்குப் பின்னர் வந்த ராணுவ அரசு ஜமாத்-இ-இசுலாமியக் கட்சியை மீண்டும் அரசியலில் அனுமதித்தது. இவர் அக்கட்சியின் துணைத்தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Summary of verdict in Quader Mollah case". The Daily Star. 6 February 2013. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=268072. பார்த்த நாள்: 11 December 2013.
- ↑ Tahmima Anam (13 February 2013). "Shahbag protesters versus the Butcher of Mirpur". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 11 December 2013.
- ↑ 3.0 3.1 Quader Molla hangs finally for war crimes bdnews24. 12 December 2012.
- ↑ Macpherson, Caroline (5 February 2013). "ICT convicts A. Q. Molla of 5 charges and sentences him to life imprisonment". International law bureau இம் மூலத்தில் இருந்து 12 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212121953/http://www.internationallawbureau.com/index.php/ict-convicts-a-q-molla-of-5-charges-and-sentences-him-to-life-imprisonment/.
- ↑ 5.0 5.1 5.2 "Summary of verdict in Quader Mollah case". The Daily Star (Bangladesh). 6 February 2013. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=268072. பார்த்த நாள்: 6 February 2013.
- ↑ "Bangladesh hangs Islamist leader despite U.N. objections". சிஎன்என். 13 டிசம்பர் 2013. http://www.cnn.com/2013/12/12/world/asia/bangladesh-islamist-hanging/index.html.
- ↑ "Bangladesh jails Islamic party leader for life". தி கார்டியன். 5 பெப்ரவரி 2013. http://www.guardian.co.uk/world/2013/feb/05/bangladesh-jails-islamic-leader. பார்த்த நாள்: 6 February 2013.
- ↑ http://bdnews24.com/bangladesh/2013/09/17/quader-molla-to-go-to-the-gallows-for-murders
- ↑ "Huge Bangladesh rally seeks death penalty for War Crimes". பிபிசி. 8 பெப்ரவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21383632. பார்த்த நாள்: 9 February 2013.
- ↑ "Case history". Supreme Court. Archived from the original on 21 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mirpur butcher Molla must die, says SC". bdnews24. 17 September 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
- ↑ The Economist, 1 July 2010, accessed 7 March 2013.
- ↑ Philip Hensher (19 February 2013). "The war Bangladesh can never forget". The Independent. http://www.independent.co.uk/news/world/asia/the-war-bangladesh-can-never-forget-8501636.html#. பார்த்த நாள்: 26 February 2013.