அப்துல் குவாவி தேசுனாவி

அப்துல் குவாவி தேசுனாவி (1 நவம்பர் 1930- 7 யூலை 2011; உருது ) [1][2] என்பவர் இந்திய உருது எழுத்தாளரும், கடிந்துரையாளரும் (விமர்சகர்) பன்மொழியாளரும் , ஆதார நூல் பட்டியல் (உசாத்துணை) சேகரிப்பாளும் ஆவார். இவர் உருது இலக்கியத்தில் பல நூல்களை எழுதி உள்ளார். மௌலானா அப்துல் கலாம் ஆசாத், மிர்சா காலிப், அல்லமா முகமது இக்பால் ஆகியோர் குறிந்து எழுதிய நூல்கள் சிறப்பு பெற்றவை. இவர் பல விருதுகளை தன்னுடைய இலக்கியப் பணிக்காக பெற்றுள்ளார்.[1][3] He was awarded with several awards for his literary work.[3]

அப்துல் குவாவி தேசுனாவி

வாழ்க்கை

தொகு

தேசுனாவி பீகாரில் உள்ள தேசுனா என்ற உள்ளூரில் [4] இசுலாமிய அறிஞர் சுலைமான் நட்வி குடும்பத்தில் பிறந்தார். சுலைமான் தங்கள் குடும்பம் அல்லாவின் இறுதி இறை தூதரான முகமதுவின் குடும்பத்தின் மரபு உடையது என்றார்[3]. இவரின் தந்தை சையது முகமது சையது ராசா மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் உருது அரபு பாரசீக மொழிகளுக்கு பாடம் எடுத்த பேராசியர். தேசுனாவிக்கு பேராசியர். சையது மோகி ராசா என்ற அண்ணனும் பேராசியர். சையது அப்துல் வாலி தேசுனாவி என்ற தம்பியும் உள்ளார்கள்.[3]

போபாலில் உள்ள பல அறிஞர்களும் புலவர்களும் ஆசிரியர்களும் இவரின் மாணவர்கள். இவரின் வழிகாட்டுதலில் பல மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். இவர் போபாலில் 7 யூலை 2011இல் மரணமடைந்தார்.[4]

தேசுனாவி பீகாரிலுள்ள அர்ராவில் தொடக்கப்பள்ளி கல்வியை முடித்தார். மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலை & முதுகலை பட்டயப்படிப்புகளை முடித்தார்[3]. இவர் சைபா முதுகலை கல்லூரியில் உருது துறையில் பிப்பரவரி 1961இல் இணைந்தார். பின்பு அக்கல்லூரியின் உருது துறையின் பேராசிரியாகவும் துறைத் தலைவராகவும் உயர்ந்தார். 1990இல் ஓய்வு பெற்ற பின் பல பதவிகளை வகித்தார்

ஆதாரநூற் பட்டியல்

தொகு

இவர் பல வல்லநர்களின் நூல்களை தொகுத்து வைத்தார்.

  • Allama Iqbal Bhopal Mein, publisher, Dept. of Urdu Saifia College,Bhopal (1967)[3]
  • Bhopal Aur Ghalib, publisher, Dept. of Urdu Saifia College,Bhopal (1969)[3]
  • Nuskha-E-Bhopal Aur Nuskha-A-Bhopal Sani, publisher, Dept. of Urdu Saifia College,Bhopal (1970)[3]
  • Motala—E—Khotoot—E—Ghalib (1975) (Edition 2nd) (1979)[3]
  • Iqbal Uneesween Sadi Mein, publisher, Naseem Book Depot, (1977)[3]
  • Iqbal Aur Dilli, Publisher Nai Awaz Jamia Nagar New Delhi (1978)[3]
  • Iqbal Aur Darul Iqbal Bhopal, publisher, Naseem Book Depot, (1983)[3]
  • Iqbaliat Ki Talash, Makataba Jamia, (1984)[3]
  • Iqbaliat Ki Talash, publisher, Globe Publishers, Urdu Bazar Lahore, Pakistan (1985)[3]
  • Abul Kalam Azad Urdu, Publisher சாகித்திய அகாதமி (1987)[3]
  • Maulana Abul Kalam Mohiuddin Ahmad Azad Dehlavi (1988)[3]
  • Talash—E—Azad, publisher, Maharashtra Urdu Academy[3]
  • Hayat Abul Kalam Azad (2000),Publisher, Modern Publishing House New Delhi.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Noted Urdu Litterateur Abdul Qavi Desnavi Dead". OutLookIndia.com. 7 July 2011. Archived from the original on 16 June 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
  2. "Abdul Qavi Desnavi (professor)". KhojKhabarNews.com. 23 February 2010. Archived from the original on 14 March 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 "Noted Scholar Qavi Dednavi is no more". The IndianAwaaz.com. 7 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
  4. 4.0 4.1 "Noted Urdu litterateur". IbnLive.in.com. 7 July 2011. Archived from the original on 17 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_குவாவி_தேசுனாவி&oldid=3784175" இலிருந்து மீள்விக்கப்பட்டது