அப்துல் சலாம்

இந்திய அரசியல்வாதி

அப்துல் சலாம் (Abdul Salam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு இறக்கும் வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் மணிப்பூர் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். மணிப்பூர் அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1] முன்னதாக அப்துல் சலாம் மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வாப்காய் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]

அப்துல் சலாம்
Abdul Salam
உறுப்பினர் மாநிலங்களவை
for மணிப்பூர்
பதவியில்
10 ஏப்ரல் 2014 – 28 பிப்ரவரி 2017
முன்னையவர்?
பின்னவர்பாபானந்த சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-03-01)1 மார்ச்சு 1948
எய்போங்கு மகோங்கு, மணிப்பூர், இந்தியா
இறப்பு28 பெப்ரவரி 2017(2017-02-28) (அகவை 68)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அப்துல் சலாம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று தன்னுடைய 68 ஆவது வயதில் இறந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Haji Abdul Salam - Member Of Parliament". Government of Manipur. Archived from the original on May 31, 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. 2.0 2.1 "Congress Rajya Sabha member from Manipur, Haji Abdul Salam passes away". The Northeast Today. 2017. Archived from the original on 2017-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_சலாம்&oldid=3848078" இலிருந்து மீள்விக்கப்பட்டது