அப்துல் மொயின் கான்

வங்காளதேச அரசியல்வாதி

முனைவர் அப்துல் மொயின் கான் (Dr. Abdul Moyeen Khan) (பிறப்பு 1 ஜனவரி 1947) [1] ஓர் வங்காளதேச தேசியக் கட்சி அரசியல்வாதி ஆவார். [2] [3] இவர், கட்சியின் தற்போதைய நிலைக்குழு உறுப்பினராக உள்ளார். [4] 1993-1996 இல் வங்காளதேச அரசாங்கத்தின் திட்டமிடலுக்கான மாநில அமைச்சராகவும், 2001-2002 இல் தகவல் அமைச்சராகவும், 2002-2006 இல் அறிவியல் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சராகவும் இவர் பணியாற்றினார். [5] [6] இவர் 1991 முதல் 2006 வரை வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். [7] [8] [9] [10] [11]

பின்னணி

தொகு

புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் உறுப்பினராகவும், அதன் முதல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் வங்காளதேச தேசியக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் அதன் துணைத் தலைவராகவும் இருந்தார். 1977-1982 காலகட்டத்தில் உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அப்துல் மொமன் கானின் மகனாவார். [12] [13]

தொழில் ரீதியாக ஒரு கல்வியாளரான முனைவர் கான், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனைத்து தேர்வுகளிலும் விருதுகள் மற்றும் தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்றுத் தேர்ச்சிப் பெற்றார். 1973 இல் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டாக்கா பல்கலைக்கழகத்தில் 1991 வரை இயற்பியல் பேராசிரியராக இருந்தார். 1991 இல் ஐந்தாவது நாடளுமன்றத்திற்கு முதன்முதலில் வெற்றிகரமாக போட்டியிட்டு, நர்சிங்டி 2 தொகுதிக்கான உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தொடர்ந்து 3 நாடாளுமன்றங்களில் தொடர்ந்து போட்டியிட்டு 2006 ஆம் ஆண்டு வரை தனது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்

தொழில்

தொகு

டிசம்பர் 2009 இல், வங்காளதேச தேசியக் கட்சியின் கொள்கை திட்டமிடல் நிலைக்குழுவில் கான் உறுப்பினரானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Profile - Mr. Abdul Moyeen Khan".
  2. "Ahead of Bangladesh vote, opposition says it faces 'a reign of terror'". Reuters. 2018-12-28. https://www.reuters.com/article/us-bangladesh-election-violence-insight-idUSKCN1OR0KO. 
  3. "Nat'l biotechnology policy soon: Moyeen Khan". The Daily Star. 25 August 2005 இம் மூலத்தில் இருந்து 13 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161013144951/http://archive.thedailystar.net/2005/08/25/d50825100283.htm. 
  4. "BNP's names 17 members of the policymaking Standing Committee". bdnews24.com. https://bdnews24.com/politics/2016/08/06/bnp-announces-new-national-standing-committee. 
  5. "Cabinet of Bangladesh 2001".
  6. Department Of State. The Office of Electronic Information, Bureau of Public Affairs. "United States Signs Science and Technology Agreement with Bangladesh".
  7. "List of 9th Parliament Members".
  8. "8th Parliament Members". Archived from the original on 2019-01-12. பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.
  9. "List of 5th Parliament Members".
  10. "List of 7th Parliament Members".
  11. "List of 4th Parliament Members".
  12. Islam, Sirajul. Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
  13. "আধুনিক নরসিংদী গড়ার স্বপ্নদ্রষ্টা আবুদল মোমেন খান -ড. আব্দুল মঈন খান". Online News Network. 12 December 2015. பார்க்கப்பட்ட நாள் 13 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_மொயின்_கான்&oldid=4108723" இலிருந்து மீள்விக்கப்பட்டது