அப்துல் மொமன் கான்
அப்துல் மொமன் கான் (Abdul Momen Khan) (1 அக்டோபர் 1919 - 12 டிசம்பர் 1984) ஓர் வங்காளதேச தேசியக் கட்சி அரசியல்வாதி ஆவார்.[1]
அப்துல் மொமன் கான் | |
---|---|
আবদুল মোমেন খান | |
உணவுத் துறை அமைச்சர் | |
பதவியில் ஆகஸ்ட் 1977 – மார்ச் 1982 | |
வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1979–1982 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1919 டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 12 திசம்பர் 1984 | (அகவை 65)
தேசியம் | வங்காள தேசத்தவர் |
அரசியல் கட்சி | வங்காளதேச தேசியக் கட்சி |
பிள்ளைகள் | அப்துல் மொயின் கான் |
முன்னாள் கல்லூரி | தாக்கா பல்கலைக்கழகம் |
பின்னணி
தொகுமொமென் கான்,மாணவராக இருந்தபோது, டாக்கா பல்கலைக்கழகத்தின் புதிதாக நிறுவப்பட்ட மாணவர் சங்கத்தின் முதல் பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1941 இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். 1954 இல், இவர் பாக்கித்தான் குடிமைப் பணியில் சேர்ந்தார். 1977 ஆம் ஆண்டு அரசியலில் சேருவதற்கு முன்பு இவர் வங்காளதேசத்தில் ஆட்சிப் பணியின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார். அவர் 1977 இல் சியாவுர் இரகுமான் அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சரானார்.
அரசியல்வாதி
தொகுமொமன் கான் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் உறுப்பினராகவும், அதன் முதல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் வங்காளதேச தேசியக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் அதன் துணைத் தலைவராகவும் இருந்தார். 1977-1982 காலகட்டத்தில் உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
மொமென் கான், 1979 இல் வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Islam, Sirajul (2012). "Khan, Abdul Momen". In Islam, Sirajul; Akbar, Md. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.