அப்பலாச்சியன் தடம்

அப்பலாச்சியன் தடம் (Appalachian Trail) என்பது கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள குறிப்பிடத்தக்க காட்டு வழி நெடுந்தூர நடைபாதை மற்றும் மலையேற்றப் பாதை ஆகும். இப்பாதை ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்கர் மலையில் இருந்து நியூஇங்கிலாந்தில் உள்ள காதடின் மலை வரை நீண்டு கிடக்கிறது.[2] இதன் நீளம் தோராயமாக 3,510 கி.மீ ஆகும். இத்தடத்தின் பெரும்பகுதி காட்டுக்குள் இருந்த போதிலும் சிறுபகுதி நகரங்கள், சாலைகள் மற்றும் ஆறுகளால் குறுக்கிடப்படுகிறது.

அப்பலாச்சியன் தடம்
வரைபடம்
தொடங்குமிடம் & முடியுமிடம் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்கர் மலை, நியூஇங்கிலாந்தில் உள்ள காதடின் மலை
பயன்பாடு நெடுந்தூர நடை
உயர வேறுபாடு 515,000 அடி (156,972 m)[1]
உயரமான இடம் கிளிங்மேன்ஸ் முகடு,6643 அடி
தாழ்வான இடம் ஹட்சன் ஆறு,124 அடி
கடினநிலை நடுத்தரம் முதல் மிகக்கடினம்
பருவகாலம் வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை
காணுமிடங்கள் அப்பலாச்சியன் மலைகள்
ஆபத்துகள் கடும் காலநிலை
அமெரிக்கக் கருங்கரடி
உண்ணி மூலம் வரும் நோய்கள்-
கொசுக்கடி மற்றும் அதனால் வரும் நோய்கள்
நச்சுப்பாம்புகள்
நச்சுத் தாவரங்கள்
வயிற்றுப் போக்கு

அப்பலாச்சியன் தடத்தைப் பலர் கடந்துள்ளனர். இதைக் குறித்து எண்ணற்ற புத்தகங்கள், வலைத்தளங்கள் உள்ளதுடன் இத்தடத்திற்கான இரசிகர் மன்றங்களும் பல உள்ளன.

இத்தடத்தை அமெரிக்க அரசின் தேசிய பூங்கா சேவையும் அப்பலாச்சியன் தட பாதுகாப்பு அமைப்பு எனும் வணிக நோக்கற்ற அமைப்பும் பராமரிக்கின்றன.[3][4][4]

வரலாறு

தொகு

இப்பாதை குறித்த எண்ணம் முதன் முதலில் பென்டான் மெக்காயே என்ற வனவியலாளரால் உருவாக்கப்பட்டது. நகரவாசிகள் காடு குறித்து அறிந்து கொள்ளும் விதமாக அவர் தனது திட்டத்தை உருவாக்கினார். தனது இத்திட்டத்தை அவர் நூலாகவும் வெளியிடச் செய்தார்.

தாவர விலங்கினங்கள்

தொகு

அப்பலாச்சியன் தடத்தில் ஆயிரக்கணக்கான தாவர விலங்கினங்கள் உள்ளன. இதில் இரண்டாயிரம் அருகி வரும் உயிரினங்களும் அடக்கம். அப்பலாச்சியன் பாதையில் செல்லும் ஒருவர் காணக்கூடிய பெரிய விலங்கு அமெரிக்க கருங்கரடி.[5][6] செம்புத்தலையன், கிலுகிலுப்பைப் பாம்பு[7] உள்ளிட்ட ஆபத்தான பாம்புகளும் இத்தடத்தில் உள்ளன. புகலிடங்களில் வசிக்கும் எலியினால் ஹண்டா வைரசு உள்ளிட்ட பல நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Shuman, Steve. "AT Elevation Gain and Loss, by Section". பார்க்கப்பட்ட நாள் 2011-04-18.
  2. Gailey, Chris (2006). "Appalachian Trail FAQs" பரணிடப்பட்டது 2008-05-05 at the வந்தவழி இயந்திரம் Outdoors.org (accessed September 14, 2006)
  3. (January 1985), "A Fork in the Trail". Audubon. 87 (1):140-141
  4. 4.0 4.1 APPLEBOME, PETER (May 31, 2010), "A Jolt of Energy for a Much Trod-Upon Trail". New York Times. :14
  5. Wingfoot "Black Bears on the Appalachian Trail" TrailPlace.com (accessed September 14, 2006)
  6. "Bear sightings on the Trail" (PDF). Archived from the original (PDF) on 2010-07-05. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
  7. "Appalachian Trail Conservancy Wildlife FAQ". Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பலாச்சியன்_தடம்&oldid=3671452" இலிருந்து மீள்விக்கப்பட்டது