அப்பல்லோ 13 (விண்கலம்)
|
அப்பல்லோ 13 (Apollo 13) அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் ஏழாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். இது நிலவில் தரையிறங்கும் நோக்கோடு ஏவப்பட்டது (அப்பல்லோ 11, அப்பல்லோ 12 -களைத் தொடர்ந்து). இக்கலம் ஏப்ரல் 11, 1970 அன்று சரியாக 13:13 CST (மத்திய கால மண்டலம்-- வட அமெரிக்காவில்)-ல் ஏவப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆக்சிசன் கலன் வெடித்ததால் நிலவில் தரையிறங்குவது இடைநிறுத்தம் செய்யப்பட்டது. ஆக்சிசன் கலன் வெடித்ததால் சேவைப் பெட்டகமும் அதைச் சார்ந்திருந்த கட்டளைப் பெட்டகமும் பாதிக்கப்பட்டன. குறைந்த திறன்மூலம், சிற்றறை வெப்பக்குறைவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை பிரித்தெடுக்கும் அமைப்பை தற்காலிகமாக செய்தாகவேண்டிய சூழல் போன்ற மிகக் கடினமான சவால்களையும் மீறி, குழுவினர் ஏப்ரல் 17 அன்று மீண்டும் பூமியில் தரையிறங்கினர்.
ஜேம்ஸ் ஏ. லொவெல் இப்பயணத்தின் ஆணையாளராயிருந்தார். ஜான் எல். ஜாக் ஸ்விகர்ட் கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் ஃப்ரெட் டபிள்யூ. ஹெய்ஸ் நிலவு (நிலவு உலவி?) பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் இருந்தனர். கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டியாக முதலில் தேர்வாகியவர் கென் மாட்டிங்லி. இவர் ஜெர்மன் மீசல்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அப்பணி ஸ்விகர்ட்-டுக்கு கிடைத்தது.
உசாத்துணைகள்
தொகு- ↑ Richard W. Orloff. "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)". NASA. Archived from the original on 2011-03-16. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23.