அப்பாச்சி ஹடூப்

அப்பாச்சி ஹடூப்[2] ஒரு திறந்த மூல மென்பொருள் கட்டமைப்பாகும். இது மிகப் பெரிய அளவிலான தரவுகளை ப்ரோசெஸ் செய்ய உதவுகிறது. இதனை செய்வதற்கு அன்றாடம் பயன்படுத்தும் கணிப்பொறிகள் மூலம் கிளஸ்டர் உருவாக்கி அதன் மூலம் பெரிய அளவிலான தரவுகளை ப்ரோசெஸ் செய்ய உதவும் ஒரு கட்டமைப்பு இது. இது மேப்/குறை என்ற நிரலாக்க கருத்தியலை அடிப்படையாக கொண்டுள்ளது.

அபாச்சி ஹடூப்
உருவாக்குனர்அபாச்சி மென்பொருள் பவுண்டேஷன்
அண்மை வெளியீடு2.2 / அக்டோபர் 15 2013 (2013-10-15), 4049 நாட்களுக்கு முன்னதாக [1]
Preview வெளியீடு2.1.0-beta / ஆகத்து 25 2013 (2013-08-25), 4100 நாட்களுக்கு முன்னதாக [1]
மொழிஜாவா நிரலாக்க மொழி
இயக்கு முறைமைCross-platform
உருவாக்க நிலைசெயலில்
மென்பொருள் வகைமைDistributed File System
உரிமம்அப்பாச்சி அனுமதி 2.0
இணையத்தளம்hadoop.apache.org

அப்பாச்சி ஹடூப் அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளையின் ஒரு பதிவு பெற்ற வணிக முத்திரை ஆகும்.

வரலாறு

தொகு

அப்பாச்சி ஹடூப் டக் கட்டிங் மற்றும் மைக் காபெறேல்லா[3] 2005ல் உருவாக்கப்பட்டது. இது முதலில் Nutch தேடல் பொறி திட்டத்தின் ஆதரவிற்காக உருவாக்கப்பட்டது. இந்தப் பெயர் டக் கட்டிங் அவரது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த யானை பொம்மையின் பெயரில் அமைக்கப்பட்டது.

வளர்ச்சி

தொகு
  • நுட்ச் 2002 ல் தொடங்கியது, ஒரு வேலைசெய்யும் தவழுமி(Crawler) மற்றும் தேடல் அமைப்பு உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட்டது. ஆனால் இதன் கட்டமைப்பு பில்லியன் கணக்காண வலை பக்கங்களை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்திருந்தனர்.
  • 2003ல் கூகிள் கோப்பு முறைமை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்தது. அது மேலும் கூகிள் நிறுவனத்தில் பயன்பாட்டில் இருந்து வந்தது.[4]
  • 2004ல் நுட்ச் திட்டமானது திறமூலம் ஆக்கப்பட்டு நுட்ச் பரம்பிய கோப்பு முறைமை உருவாக்கப்பட்டது.
  • டிசம்பர் 2004ல் மேப்/குறையை பற்றிய ஆராய்ச்சி கட்டுரையும் வெளிவந்தது. [5]
  • 2005ல் நுட்ச் குழுவினர் நுட்ச் திட்டத்தில் மேப்/குறையை செயற்படுத்த தொடங்கினர்.
  • பிப்ரவரி 2006ல் நுட்ச் திட்டத்தில் இருந்து வெளியேறி ஹடூப் என்ற தனி துணைத் திட்டத்தை தொடங்கினர். அதே சமயத்தில் டக் கட்டிங்கும் யாஹூ நிறுவனத்தில் சேர்ந்தார்.
  • பிப்ரவரி 2008ல் யாஹூ நிறுவனமானது தந்து 10000 நோடுகளை கொண்ட ஹடூப் கொத்தணி (Cluster) பற்றி உலகுக்கு அறிவித்தது.[6]
  • ஜனவரி 2008 ல், ஹடூப்பை அப்பாச்சி அதன் சொந்த உயர்மட்ட திட்டமாக மாற்றியது. அதன் வெற்றி மற்றும் அதன் பல்வேறு, செயலிலும், சமூகத்திலும் உறுதி செய்யப்பட்டது.

வர்த்தக ரீதியான சில ஹடூப் வெளியீடுகள்

தொகு

முக்கிய பயனாளிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Hadoop Releases". Hadoop.apache.org. பார்க்கப்பட்ட நாள் 2013-04-08.
  2. http://hadoop.apache.org/
  3. "Michael J. Cafarella". Web.eecs.umich.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  4. http://static.googleusercontent.com/media/research.google.com/en//archive/gfs-sosp2003.pdf
  5. Jeffrey Dean and Sanjay Ghemawat, “MapReduce: Simplified Data Processing on Large Clusters ,” December 2004,
  6. Yahoo! Launches World’s Largest Hadoop Production Application, http://developer.yahoo.com/blogs/hadoop/yahoo-launches-world-largest-hadoop-production-application-398.html பரணிடப்பட்டது 2013-12-24 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_ஹடூப்&oldid=3231609" இலிருந்து மீள்விக்கப்பட்டது