அப்பா பைத்தியம் சாமிகள்
அப்பா பைத்தியம் சாமிகள் என்பவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் கருவூர் கோட்டை ஜமீன் வாரிசாக சித்திரை 8 1859 அன்று பிறந்தவர். பதினாறு வயதில் வீட்டினை விட்டு வெளியேறி பழனியில் தங்கினார். அழுக்கு சுவாமி எனும் சித்தரை குருவாக ஏற்று சித்துகளை கற்றார்.
பக்தர்களிடம் தன்னை பைத்தியம் என்று இவர் கூறிக்கொண்டமையால் பைத்திய சாமி என்றும், பக்தர்களின் கோரிக்கைகளை தந்தைபோல இருந்து நிறைவேற்றுவதால் அப்பா பைத்தியம் சாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். எண்ணற்ற ஊரில் தங்கி பக்தர்களுக்கு உதவிய இவர் சேலம் சூரமங்கலத்தில் 141வது வயதில் தை 28 2000 த்தில் ஜீவ சமாதி அடைந்தார்.[2]
கோயில்கள்
தொகு- அப்பா பைத்தியம் சாமிகள் திருக்கோயில், கோரிமேடு, புதுச்சேரி
- அப்பா பைத்தியம் சாமிகள் ஜீவசமாதி மற்றும் கோயில், சூரமங்கலம், சேலம்