அப்போகொனைடீ

அப்போகொனைடீ
தெராபோகன் கௌதெர்னி (Pterapogon kauderni)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
அப்போகொனைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

அப்போகொனைடீ (Apogonidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய கடற் பகுதிகளில் காணப்படுகின்றன. முக்கியமாக இவை கடல் மீன்கள், சில இனங்கள் உவர் நீரிலும் வாழுகின்றன. இவற்றுள் சில இனங்கள் மீன் காட்சியகங்களில் விரும்பி வைக்கப்படுகின்றன. இவை சிறியனவாகவும், அமைதியானவையாகவும், அழகிய நிறங்கள் கொண்டவையாகவும் இருப்பதால் அவற்றை மக்கள் பார்க்க விரும்புகின்றனர்.

பொதுவாக இவை சிறிய மீன்கள். பெரும்பாலான இனங்கள் 10 சதம மீட்டர்களுக்கும் (3.9 அங்குலம்) குறைவான நீளம் கொண்டவை. வாய் பெரிதாக அமைந்திருப்பதும், முதுகுச் செட்டைகள் இரண்டாகப் பிரிந்து இருப்பதுவும் இவற்றின் சிறப்பு இயல்பாகும். வெப்பவலய, துணைவெப்பவலயக் கடல்களில் வாழும் இக் குடும்ப மீன்கள் பொதுவாகப் பவளப்பாறைத் திட்டுகளிலும், குடாப் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.

இவை இரவு நேரங்களிலேயே உணவு தேடுகின்றன. பகலில் பவளப்பாறைகளில் உள்ள இருண்ட இடுக்குகளில் மறைந்து இருக்கின்றன. இவற்றுட் சில மீனினங்கள் ஆண் மீன்களின் வாய்க்குள் முட்டை இடுகின்றன.

வகைப்பாடு தொகு

இக் குடும்பத்தின் 2 துணைக் குடும்பங்களில் 24 பேரினங்களைச் சேர்ந்த 331 இனங்கள் உள்ளன. அப்போகொனைடீ குடும்பம்

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போகொனைடீ&oldid=1352227" இலிருந்து மீள்விக்கப்பட்டது