அக்டினோட்டெரிகீயை
(அக்ட்டினோட்டெரிகீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அக்டினோட்டெரிகீயை புதைப்படிவ காலம்: | |
---|---|
அத்திலாந்திக் ஹெரிங் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | கிளீன், 1885
|
துணைவகுப்புக்கள் | |
அக்டினோட்டெரிகீயை (Actinopterygii), என்பது நடுமுள் துடுப்புள்ள மீன்களைக் குறிக்கும். இம் முதுகுநாணி மீன்களின்(Osteichthyes)[1][2] ஒரு வகுப்பு ஆகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை அக்டினோட்டெரிகீ வகுப்பு முதுகுநாணிகளுள் முக்கியமான ஒரு வகுப்பு ஆகும். 30,000க்கு மேற்பட்ட மீன் இனங்களுள் ஏறத்தாழ 99% இனங்கள் அக்டினோட்டெரிகீயை வகுப்புக்குள் அடங்குகின்றன.[3] இவ் வகுப்பைச் சேர்ந்த மீனினங்கள், நன்னீரிலும், கடல் சூழல்களிலும், ஆழமான கடல் பகுதிகளில் இருந்து மலையுச்சிச் சிற்றாறுகள் வரை எங்கும் பரவிக் காணப்படுகின்றன. அளவைப் பொறுத்தவரை, 8 மில்லிமீட்டரே நீளம் கொண்ட பீடொசிப்பிரிசு இனத்திலிருந்து, 2300 கிலோ கிராம் நிறை கொண்ட பெருங்கடல் சூரியமீன் (Ocean Sunfish), 11 மீட்டர் நீளம் கொண்ட ஓர்மீன் (Oarfish) வரையில் பல்வேறு வகையான இவ்வகுப்பில் உள்ளன.
மேற்கோள்கள்
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Actinopterygii at UntamedScience.com பரணிடப்பட்டது 2010-11-25 at the வந்தவழி இயந்திரம்
- Jonna, R. (2004) Actinopterygii பரணிடப்பட்டது 2013-09-07 at the வந்தவழி இயந்திரம் Animal Diversity Web. Updated 29 August 2006. Accessed 2 February 2013.