அப்லோவைட்டு

சல்பேட்டு கனிமம்

அப்லோவைட்டு (Aplowite) என்பது CoSO4•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமம் ஆகும். இது இயற்கையாகத் தோன்றும் ஒரு நான்முகி கோபால்ட்(II) சல்பேட்டு ஆகும். எழுநீரேற்றான பைபெரைட்டு கனிமம், அறுநீரேற்றான மூரவுசைட்டு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் இதுவொரு கீழ்நிலை நீரேற்றாகவும், ஒற்றை நீரேற்றான கோபால்ட்கீசெரைட்டுடன் ஒப்பிடுகையில் இதுவோர் உயர் நீரேற்றாகவும் அறியப்படுகிறது. பொதுவாக மூரவுசைட்டுடன் சேர்ந்தே படிகங்களாக இது கிடைக்கிறது[2][3].

கோபால்ட்டைட்டு படிகத்தின் மீது அப்லோவைட்டு
பொதுவானாவை
வகைரோசினைட்டு
வேதி வாய்பாடு(Co,Mn,Ni)SO4 • 4H2O
இனங்காணல்
நிறம்அடர் இளம் சிவப்பு, ஒளியில் மெல்லிய இளம் சிவப்பு
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
அடர்த்தி2.33 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது) 2.36 கிசெ.மீ3 (கணக்கிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (–). α = 1.528 β = n.d. γ = 1.536
2V கோணம்என்.டி.
கரைதிறன்நீரில் கரையும்
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள் தொகு

  1. Jambor, J.L., and Boyle, R.W., 1984. Moorhouseite and aplowite, new cobalt minerals from Walton, Nova Scotia. Canadian Mineralogist 8, 166-171
  2. Jambor, J.L., and Boyle, R.W., 1984. Moorhouseite and aplowite, new cobalt minerals from Walton, Nova Scotia. Canadian Mineralogist 8, 166-171
  3. "Aplowite: Aplowite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்லோவைட்டு&oldid=2706644" இலிருந்து மீள்விக்கப்பட்டது