அமரங்காவு
அமரங்காவு என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தொடுபுழா நகராட்சியில், கோலனி[1] என்னுமிடத்தில் அமைந்துள்ள, வனதுர்கா தேவி கோயிலாகவும், புனித தோப்பாகவும் உள்ளது. இடுக்கி மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய புனிதமான தோப்பு என்ற பெயரை இது பெற்றுள்ளது. இது 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பல்லுயிர் வளம் நிறைந்து காணப்டுகிறது.