அமரசிம்மன்

அமரசிம்மன் (Amara Simha) (கி.பி. 375) கி.பி நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பௌத்த அறிஞரும், அமரகோசம் எனும் சமசுகிருத மொழியின் இலக்கண ஆசிரியர் மற்றும் கவிஞரும் ஆவார்.

அமரகோசம் நூலின் அட்டைப்படம்

குப்தப் பேரரசர்களில் புகழ்பெற்ற இரண்டாம் சந்திர குப்தரின் அரசவையின் நவரத்தினங்கள் எனப்போற்றப்பட்ட ஒன்பது அறிஞர்களில் ஒருவராவர். [1][2]

அமரசிம்மனின் படைப்புகளில் மிகவும் புகழ்பெற்றது அவரது சமசுகிருத மொழி இலக்கண நூலான அமரகோசம் ஆகும்.[3]

அமரகோசம் எனும் இலக்கண நூல் மூன்று தொகுப்புகளாக உள்ளது.[1] [4] இதில் 10,000 சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமரசிம்மனின் அமரகோசம் எனும் சமசுகிருத இலக்கண நூல், 1798 முதல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. [1] [5]

மேற்கோள்கள் தொகு

Attribution:

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரசிம்மன்&oldid=3231628" இலிருந்து மீள்விக்கப்பட்டது