அமரேந்திர நாத் சென்

இந்திய நீதிபதி

அமரேந்திர நாத் சென் (Amarendra Nath Sen) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1979 ஆம் ஆண்டில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றினார். [1] இவரது தாத்தா பைகுந்த நாத் சென் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர் மற்றும் வங்காளத்தின் முக்கிய வழக்கறிஞர் ஆவார். [2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். முர்சிதாபாத்தில் உள்ள சைதாபாத் ஆர்டிங் எச் இ பள்ளியில் படித்தார். பெர்காம்பூரில் உள்ள கிருட்டிணாத்து கல்லூரி, சுகாட்டிசு பேராலயக் கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் அசுரா சட்டக் கல்லூரி ஆகியவற்றில் தன்னுடைய கல்லூரிக் கல்வியை படித்து முடித்தார். [1] [3] இதைத் தொடர்ந்து, இலண்டனில் உள்ள இன்னர் டெம்பிள் தேர்வில் பாரிசுடர்-அட்-லா தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். [1]

தொழில் தொகு

அவர் ஜனவரி 1947 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் குடிமையியல் வழக்குகளை முக்கியமாகக் கையாண்டார். [1] கூடுதல் நீதிபதியாகவும் இவர் நியமிக்கப்பட்டார், பின்னர் 1966 ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் டிசம்பர் 1979 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 1981 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். அமரேந்திர நாத் சென் செப்டம்பர் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார் [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Hon'ble Mr. Justice A.N. Sen". Archived from the original on 15 February 2012. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
  2. Judges of the Supreme Court of India: 1950–1989. https://books.google.com/books?id=GIAyDwAAQBAJ&pg=PT261. பார்த்த நாள்: March 3, 2018. 
  3. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 591
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரேந்திர_நாத்_சென்&oldid=3772834" இலிருந்து மீள்விக்கப்பட்டது