அமர் பிரசாத் ரே
இந்திய மருத்துவர்
அமர் பிரசாத் ரே (Amar Prasad Ray) ஓர் இந்திய மருத்துவர் மற்றும் மலேரிய நோயியல் நிபுணர் ஆவார்.[1] 1913 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சமூக ஆரோக்கியம் மற்றும் இந்தியாவில் மலேரியா தொற்றுநோய் மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகப் புகழ் பெற்றார்.[1] 1962 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். 1974 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பும் இவருக்கு ஆளுமை விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.[2] 1967 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமும் சமூகத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[3] இவர் கல்யாணி ரே என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு ரவீந்திரநாத் ரே, எல்லா சென் மற்றும் உஷா மேத்தா ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
அமர் பிரசாத் ரே Amar Prasad Ray | |
---|---|
பிறப்பு | 1913 இந்தியா |
பணி | மலேரியா, மருத்துவர் |
விருதுகள் | பத்மசிறீ உலக சுகாதார அமைப்பு ஆளுமை விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Deceased fellow". Indian National Science Academy. 2015. பார்க்கப்பட்ட நாள் May 8, 2015.
- ↑ "WHO Award". WHO. 2015. Archived from the original on July 8, 2004. பார்க்கப்பட்ட நாள் May 8, 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.