அமலாக்கத் துறை வழக்கின் தகவல் அறிக்கை

அமலாக்கத் துறை வழக்கின் தகவல் அறிக்கை (Enforcement Case Information Report) (சுருக்கமாக:ECIR), அமலாக்க இயக்குனரகம் பராமரிக்கும் பொருளாதார குற்ற வழக்கின் ஒரு உள் ஆவணம் ஆகும். இது காவல் துறையினர் பராமரிக்கும் முதல் தகவல் அறிக்கை போன்று இருப்பினும், அமலாக்கத் துறை வழக்கின் தகவல் அறிக்கையை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டியதில்லை. பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறை வழக்கின் தகவல் அறிக்கை என்பது அமலாக்க துறையால் பராமரிக்கப்படும் ஒரு உள்கட்ட ஆவணம் என்றும், அமலாக்கத் துறை வழக்கின் தகவல் அறிக்கையின் பிரதியை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்றும் 27 சூலை 2022 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[1][2][3] [4]

மேற்கோள்கள்

தொகு