அமல்பிரவா தாஸ்
அமல்பிரவா தாஸ் , அமல் பிரபா தாஸ் (Amalprava Das) என்றும் அழைக்கப்படும் ஒரு இந்திய சமூக சேவகர், காந்தியவாதி மற்றும் அசாமின் சரனியா ஹில்ஸில் உள்ள கஸ்தூரிபா ஆசிரமத்தின் நிறுவனர் ஆவார். இவர் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பெண்களுக்கான சுய உதவிக் குழு மற்றும் தலித் மக்களின் சமூக வளர்ச்சிக்காக கவுகாத்தி யுபக் சேவாதள் என்ற ஒரு அரசு சாரா அமைப்பு ஆகியவற்றையும் நடத்தி வந்தார்.[1] இந்திய அரசு, 1954 ஆம் ஆண்டில் இவருக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதினை இவரது சமூகப் பங்களிப்பிற்காக வழங்கி கௌரவித்தது.[2] இத்தகைய விருதினை முதன் முதலில் பெற்றவர்கள் பட்டியலில் இவரும் ஒருவராவார்.1981 ஆம் ஆண்டில் இவர் ஜாம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். இந்திய அரசு இவருக்கு மீண்டும் கௌரவிக்கும் பொருட்டு பத்ம விபூசண் விருதினை வழங்க முன்வந்தது. இம்முறை இவர் இவ்விருதை ஏற்கவில்லை.[1]
அமல்பிரவா தாஸ் | |
---|---|
பிறப்பு | 12 நவம்பர் 1911 திப்ருகார், அசாம், இந்தியா |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | சமூக சேவை |
பெற்றோர் | ஹரே கிருஷ்ண தாஸ் ஹேமா பிரபா தாஸ் |
விருதுகள் | பத்மசிறீ ஜம்னாலால் பஜாஜ் விருது |
வாழ்க்கை வரலாறு
தொகுஅமல்பிரவா இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசாமின் திப்ருகாரில் ஒரு பணக்கார குடும்பத்தில் 12 நவம்பர் 1911 அன்று பிறந்தார் [3] இவரது தந்தை ஹரே கிருஷ்ணா தாஸ் மற்றும் தாய் ஹேமா பிரபா தாஸ் குறிப்பிடத்தக்க காந்தியவாதிகள் ஆவர். இவர் உள்ளூர் கல்வி நிறுவனங்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். ஆனால், உள்ளூர் காட்டன் கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்டது. பின்னர் கல்லூரிப் படிப்பிற்காக கல்கத்தாவில் உள்ள பெதுன் கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் இவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். இவர் வேதியியலில் இளங்கலைப் பட்டம் (BSc) மற்றும் பயன்பாட்டு வேதியியலில் முதுகலைப் பட்டம் (MSc) பெற்றார். இதன் மூலம், அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் அசாம் பெண்மணி ஆனார்.[1][4] மருத்துவ படிப்பில் பட்டயச்சான்று பெறுவதற்காக தனது படிப்பைத் தொடர்ந்தார். பிரித்தானியர் நடத்தும் காட்டன் கல்லூரியில் கற்பிக்கும் வேலையை தேசபக்தி காரணங்களை காரணம் காட்டி மறுத்தார்.
1934 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவர் கவுகாத்திக்கு விஜயம் செய்தபோது அவரது வீட்டில் தங்கியபோது மகாத்மா காந்தியுடன் தொடர்பு கொள்ள தாஸுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பு இவரைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் இவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு வழிகாட்டியது. இவர் மைத்ரி ஆசிரமத்தை (பின்னர் கஸ்தூர்பா ஆசிரமம் என மறுபெயரிடப்பட்டது) சரணியா ஹில்ஸில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான ஒரு சொத்தில் நிறுவினார். பின்னதாக, இந்த ஆசிரமம் கஸ்தூரிபா நினைவு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. ஆசிரமத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள் குடிசைத் தொழில்களில் பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். இவ்வாறு பயிற்சி பெற்றதன் காரணமாக, கிராமத்துப் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னம்பிக்கை பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார் எனலாம். கிராம சேவிகா வித்யாலயா, கஸ்தூரிபா கல்யாண் கேந்திரா, கவுகாத்தி கடை மண்டலம், கவுகாத்தி யுபக் சேவாதள் மற்றும் அசாம் கோ-சேவா சமிதி போன்ற பல நிறுவனங்களையும் இவர் நிறுவினார்.[1]
இந்திய அரசு 1954 ஆம் ஆண்டில் பத்ம விருதுகளை அறிமுகப்படுத்திய போது இவரது பெயர் பத்மசிறீ விருதுக்கான தகுதியானோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் இவர் பெற்ற ஜாம்னாலால் பஜாஜ் விருது [5] "ஆக்கப்பூர்வமான பணிகளில் மிகச்சிறந்த பங்களிப்பு" என்பதற்காக வழங்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூசண் தருவதற்கு இவரைத் தேர்ந்தெடுத்தது. ஆனால், பொது மரியாதை மீதான அக்கறையின்மை காரணமாக இவர் அந்த விருதை நிராகரித்தார். இவரது வாழ்க்கை மற்றும் காலங்கள் 1986 ஆம் ஆண்டில் அவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு சுயசரிதைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் அரசாங்கத்தின் சமூக நலத் துறை, அவரது நினைவாக 2013 ஆம் ஆண்டு முதல் அமல் பிரவா தாஸ் விருதினை சமூக சேவையில் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பிற்காக வழங்கிவருகிறது.[6] அமல்பிரவ தாஸின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் பணியில் இத்துறை செயல்பட்டு வருகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "A Gandhian heaven for the downtrodden". 14 August 2014. https://www.telegraphindia.com/1040814/asp/guwahati/story_3619157.asp.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help); Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help) - ↑ "Jamnalal Bajaj Foundation". Jamnalal Bajaj Foundation. 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015."Jamnalal Bajaj Foundation". Jamnalal Bajaj Foundation. 2015. Retrieved 29 March 2015.
- ↑ "Sentinel". Sentinel. 28 January 2013. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
- ↑ "India Water Portal" (PDF). India Water Portal. 2015. Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Karar Nivang". Karar Nivang. 2013. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
- ↑ "Assam Tribune". Assam Tribune. 11 March 2015. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)