அமிங்கோன் (Amingaon), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் காமரூப் ஊரக மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். மேலும் இது வடக்கு கவுகாத்தி நகரத்தின் அருகே அமைந்த ஊராகும். இது எதிர்காலத்தில் அசாம் மாநிலத் தலைநகரான நிறுவுதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அமைவிடம் தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 31 அமிங்கோன் வழியாகச் செல்கிறது. இதனருகே லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி அமிங்கோன் நகரத்தின் மக்கள் தொகை 8,855 ஆகும். அதில் ஆண்கள் 4,561 மற்றும் பெண்கள் 4,294 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,282 மற்றும் 504 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.83%, இசுலாமியர் 3.83% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர். [1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிங்கோன்&oldid=3579579" இலிருந்து மீள்விக்கப்பட்டது