அமிதாவ் பானர்ஜி
அமிதாவ் பானர்ஜி (பிறப்பு:5 திசம்பர் 1926) அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகயிருந்த இந்திய முன்னாள் நீதிபதியாவார்.
தொழில் வாழ்க்கை
தொகுஅலகாபாத்திலுள்ள ஏ. பி. ஐ. கல்லூரியில் கல்வி பயின்ற பானர்ஜி, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். 1951 ஆகத்து 27 அன்று வழக்கறிஞராகப் பதிவு பெற்ற இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரனார். பானர்ஜி குற்றவியல் விவகாரங்கள், உரிமையியல், அரசியலமைப்பு, நிறுவன விடயங்கள் போன்றவற்றில் பணியாற்றினார். 1973 இல் அலகாபாத் உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1975 ஆகத்து 4 அன்று நிரந்தர நீதிபதியாக ஆனார். நீதிபதி பானர்ஜி 1987 சூலை 16 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்டு 1988 நவம்பர் 6 அன்று ஓய்வு பெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "HON'BLE MR. AMITAV BANERJI". allahabadhighcourt.in. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
- ↑ "About High Court". Archived from the original on 27 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 November 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)