அமிதா பதக்

இந்திய நடிகர் மற்றும் வடிவழகி

அமிதா பதக், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இந்தித் திரைப்பட நடிகையும் விளம்பர மாதிரிப்பெண்ணும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். இவர், கிஷோர் நமித் கபூர்நடிப்பு பயிற்சிமையம் மற்றும் ஷியாமாக் தாவர் கலைநிகழ்ச்சிக் கழகம் போன்றவைகளில் நடிப்புப் பயிற்சியை பெற்றுள்ளார்.[1]

அமிதா பதக்
ராகவ் சச்சார் மற்றும் அமிதா பதக்
பிறப்புமும்பை
செயற்பாட்டுக்
காலம்
2006-2016
பெற்றோர்குமார் மங்காட் பதக்
வாழ்க்கைத்
துணை
ராகவ் சச்சார்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு
 
சுனிதி சவுகானின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ராகவ் சச்சார் மற்றும் அமிதா பதக்

இந்தி திரைப்படத் தயாரிப்பாளரான குமார் மங்காட் பதக் இவரது தந்தையாவார்.[1] இந்தி திரையுலகில் பிரபல பாடகரான, ராகவ் சச்சாரை 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியருக்கு கியான் சச்சார் (2017 ஆம் ஆண்டு பிறந்தது)[2], இவான் சச்சார் (2019 ஆம் ஆண்டு பிறந்தது) என இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.[3]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2006 ஓம்காரம் நிர்வாக தயாரிப்பாளர்
2008 ஹால்-இ-தில் சஞ்சனா சர்மா நடிகை
2010 ஆக்ரோஷ் ரோஷ்னி நடிகை
2012 பிட்டூ பாஸ் மிருணாளினி பரியார் நடிகை
2012 டார் மித்ரன் டி சீரத் நடிகை
2013 ஆத்மா - உங்களைச் சுற்றி உணருங்கள் இணை தயாரிப்பாளர்
2016 ஏக் தா ஹீரோ ஜான்கி நடிகை

இசை கானொளி

தொகு
ஆண்டு இசை வீடியோ பங்கு
2011 தில் கி ஜுபன் மாதிரி
2017 கிகி மாதிரி
2018 இஷ்க் டி குகி மாதிரி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Amita Pathak Biography". Archived from the original on 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.
  2. Kumar, Aakash (2019-07-07). "'Haal-e-Dil' Actress Amita Pathak & Singer-Composer Raghav Sachar Welcome Second Child!". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
  3. "Raghav Sachar and Amita Pathak Tie the Knot in a Star Studded Wedding [PHOTOS]". International Business Times. 23 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிதா_பதக்&oldid=4175236" இலிருந்து மீள்விக்கப்பட்டது