ஓம்காரா (திரைப்படம்)

ஓம்காரா, (ஹிந்தி: ओमकारा), ஒரு ஹிந்தி மொழித் திரைப்படம். ஒத்தெல்லோ என்ற செம்மையான நாடகத்தின் இன்றைய திரையாக்கம். விஷால் பரத்வாஜ் இயக்கி சயீஃப் அலி கான், கொங்கனா சென் ஷர்மா, அஜய் தேவ்கன், கரீனா கபூர், விவேக் ஒபராய், பிபாஷா பாசு, நசீருதீன் ஷா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். விஷால் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். குல்ஸார் பாடல்களை இயற்றியுள்ளார். வில்லியம் ஷேக்ஸ்பியர் இயற்றிய ஒத்தெல்லோ என்ற நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார் விஷால் பரத்வாஜ்.

ஓம்காரா
ஓம்காரா திரைப்படத்தின் சுவரொட்டி
இயக்கம்விஷால் பரத்வாஜ்
தயாரிப்புகுமார் மாங்கட்
கேதன் மாரூ
நீலம் பதக்
கதைவிஷால் பரத்வாஜ்
ராபின் பட்
அபிஷேக் சௌபே
இசைவிஷால் பரத்வாJ
நடிப்புஅஜய் தேவ்கன்
விவேக் ஓபராய்
சயீஃப் அலி கான்
கரீனா கபூர்
கொங்கனா சென் ஷர்மா
பிபாஷா பாசு
நசீருதீன் ஷா
ஒளிப்பதிவுதஸாதக் ஹுஸேன்
படத்தொகுப்புமேக்னா மன்சந்தா
விநியோகம்Big Screen Entertainer
வெளியீடுஜூலை 28, 2006
நாடுஇந்தியா
மொழிஹிந்தி

கதைச்சுருக்கம்

தொகு
எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

ஓமி என்று அழைக்கப்படும் ஓம்காரா, ஒரு அரசியல் கட்சியின் முதன்மைத் தலைவனாக அல்லது தளபதியாக உள்ளான். ஓமிக்கு, 'லங்க்டா' தியாகி மற்றும் கேசு என்று இரு உப-தளபதிகள் (பேச்சு வழக்கில்: அல்லக்கைகள்) நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக உள்ளனர். ஓமி, தனக்கு அடுத்த தளபதியாக கேசுவினை நியமிக்கின்றான். லங்க்டாவின் அரசியல் கனவுக்கு இது மிகப்பெரிய இடியாக விழ, ஓமியின் மனைவியான டாலி மிஷ்ரா மீது, தவறான பழி சுமத்தும் சதியில் ஈடுபடுகின்றான். டாலிக்கும் கேசுவிற்கும் தொடர்பு உள்ளதாக, தவறாக பிம்பித்தினை, ஓமியின் மனதில் மெள்ள மெள்ள, ஆனால் உறுதியாக நிறுவ முயற்சிகள் மேற்கொள்கின்றான். இதை உணராத ஓமி, அவனுடைய அழகான அகஉலகத்தினை பாழ்படுத்திக்கொள்கின்றான். உண்மையினை இறுதியில் உணரும் போது, தன்னுடைய செயல்களினால், சொல்லொன்னா துன்பத்திற்கு ஆளாகின்றான்.

கதை அல்லது கதையின் முடிவு முன்பத்தியோடு முடிவடைந்தது

திரையாக்கப்பட்ட இடம்

தொகு

ஓம்காரா, நான்கு மாத காலங்களில் எடுக்கப்பட்ட திரைப்படம். லோனாவ்லா, லக்னோ பல்கலைகழகம், அலஹாபாத், போத் கயா, மஹாபலேஷ்வர், வய் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் திரையாக்கப்பட்டது. மஹாராஷ்ட்ராவில் திரையாக்கப்பட்டாலும், உத்தர பிரதேச புலத்தினையும் சூழலையும் மறு உருவாக்கம் செய்வதில் மிக கவனம் கொண்டு செய்யப்பட்டது.

நடிகர்கள்

தொகு
நடிகர் திரையில் கதைமாந்தரின் பெயர் நாடகத்தில் கதைமாந்தரின் பெயர்
அஜய் தேவ்கன் ஓம்காரா 'ஓமி' ஷுக்லா ஒத்தெல்லோ
சயீஃப் அலி கான் ஈஷ்வர் 'லங்க்டா' தியாகி இயாகோ
விவேக் ஓபராய் கேசவ் 'கேசு' ஃபிரங்கி கேஸியொ
கரீனா கபூர் டோலி மிஷ்ரா டெஸ்டிமோனா
கொங்கனா சென் ஷர்மா இந்து எமிலியா
பிபாஷா பாசு பில்லோ சமன்பஹார் பியங்கா
நசீருதீன் ஷா பாய்ஸாப் வெனிஸ் தலைமகன்

திரைப்படக் குழு

தொகு

இத்திரைப்படத்தில் உள்ள எட்டு பாடல்களுக்கும், இசையமைத்தவர் விஷால் பரத்வாஜ்:

சுவையான துணுக்குச் செய்திகள்

தொகு
  • ஷேக்ஸ்பியர் எழுதிய மேக்பத் என்ற நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு, விஷால் பரத்வாஜ் எடுத்த திரைப்படம் மக்பூல். அதையடுத்து ரஸ்கின் பாண்ட் எழுதிய "தி ப்ளூ அம்ப்ரெல்லா" என்ற குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு வந்த திரையாக்கம் "சத்ரி ச்சோர்" என்ற திரைப்படம். இவ்விரு மறுஆக்கங்கள் வரிசையில் மூன்றாவது தான், ஓத்தெல்லோவினை அடிப்படையாகக் கொண்ட ஓம்காரா.
  • திரைப்படத்தில் உள்ள அனைத்து முதன்மை கதைமாந்தர்களின் முதல் எழுத்தும், ஒத்தெல்லோ நாடகத்தின் கதைமாந்தர்களின் முதல் எழுத்தும் (ஒலி வடிவில்) ஒன்று.
  • இத்திரைப்படத்திற்கு, தலைப்பு தேர்ந்தெடுப்பதற்காக ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டத்து. "ஓம்காரா", "இஸக்", அல்லது "ஓ ஸாத்தி ரே" என்று மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டன். (மூன்று தலைப்புகளுமே திரைப்படத்தில் உள்ள பாடல்களின் முதல் வரிகள்).

நினைவில் தங்கும் சில வசனங்கள்

தொகு

Ishwar "Langda" Tyagi: Bewakoof aur chutiya mein dhaage barabar farak hota hai. Dhage ke henge bewakoof aur hunge, chutiya. Dhaga khench lo to kaun hai chutiya kaun hai bewakoof, carore rupiye ka prashan hai bhaiya. Zara dhenkhe to sahie dulhe raja ko. Ainkhen! Tu to bewakoof hain na...?

ஈஷ்வர் "லங்க்டா" தியாகி: மடையனுக்கும் முட்டாப்பயலுக்கும் இருக்கிற வித்தியாசம் ஒரு சின்ன ""கேப்(gap)" தான். அந்த கேப்ப அழிச்சுட்டோம்னா, யாரு மடையன் யாரு முட்டாப்பயங்குறது கொஞ்ச கஷ்டமான கேள்வி, மச்சான். அது சரி மாப்ள, கொஞ்சம் உன் மூஞ்சிய காட்டு. ஆஹ்ஹா. நீ முட்டாப்பயதானே.. என்ன நாஞ்சொல்றது...

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்காரா_(திரைப்படம்)&oldid=4118484" இலிருந்து மீள்விக்கப்பட்டது