அமினாத் பைசா
அமினாத் பைசா (Aminath Faiza) மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த திவேகி மொழி கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
கட்டுரையாளர், கடிதங்களின் பெண், புகழ்பெற்ற இலக்கியவாதி, பெண்களின் வெற்றியாளர் என பலவாறாக அழைக்கப்பட்ட பைசா ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உத்வேகம் அளித்த ஒரு தேசிய நபராக கருதப்படுகிறார். மாலத்தீவின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களான மொகமத் அமீன், உசைன் சலாவுத்தீன் மற்றும் போடுஃபென்வால்கூகே சீதீ ஆகியோரால் வழிகாட்டப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவராவார்.
மாலத்தீவு குடியரசின் முதல் சனாதிபதி மொகமத்து அமீன் திதியால் உருவாக்கப்பட்ட 'திவேகி கவிஞர்களின் தோட்டம்' அமைப்பின் மூலம் தனது திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கிய பைசா பல இதழ்கள் மற்றும் வெளியீடுகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு புகழ் பெற்றவராவார்.
சுயசரிதை
தொகுஅமினாத் பைசா தனது 16 ஆவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். புகழ்பெற்ற கவிஞரும் பைசாவின் தாய் மாமனுமான மறைந்த போடுபென் வல்கூகே சீதி" எழுத்துகளால் பைசா ஈர்க்கப்பட்டார். அவருடைய கவிதைகள் எழுதி முடிக்கப்பட்டதும் பைசா அவற்றை மனப்பாடம் செய்து பாடினார். 1950 ஆம் ஆண்டுகளில் பைசா தனது படைப்புகளை காட்சிப்படுத்தத் தொடங்கினார், அந்த சமயத்தில், மாலத்தீவின் முதல் சனாதிபதி மறைந்த முகமது அமீன் திதி திவேகி கவிஞர்கள் தோட்டம் என்ற பொருள் குறிக்கும் "லென் வெரிங்கே குல்சார்" என்ற அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பில் அமினாத் பைசா மாலத்தீவு கவிதையின் டெய்சி மலர் எனக் கருதப்பட்டார். அப்போது முதலாக பைசா தனது கவிதைகள் மற்றும் பிற படைப்புகளை பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிட்டார். மேலும் இவரது வாழ்க்கை முழுவதும் எழுதப்பட்டவை புத்தகங்களாகவும் தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டன. காதல், சமூகப் பிரச்சினைகள், மதம், தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பங்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் இவர் கவிதை எழுதினார்.
மறைந்த சனாதிபதி முகமது அமீத் திதியால் மாலத்தீவில் நிறுவப்பட்ட முதல் அரசியல் கட்சியான இராயிதுங்கே முதாகத்திம் கட்சியின் ஆலோசனைக் குழுவில் பைசா பணியாற்றினார். [1] முன்னாள் மதரசாத் -உல் சனியா பள்ளியின் துணை தலைமை ஆசிரியையாகவும் பைசா பணிபுரிந்தார். மாலத்தீவு வரலாற்று மற்றும் மொழியியல் ஆராய்ச்சி மையத்திலும் பணிபுரிந்தார். 27 ஆண்டுகளுக்கும் மேலாக மொழியியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் ஊழியரான அமினாத் பைசா குடிமைப் பயிற்சி விதிகள் வேலை தொடர்பான வயது தொடர்பான தடைகளை ஏற்படுத்தியபோது மையத்தை விட்டு வெளியேறினார். ஆனாலும் தொடர்ந்து மையத்திற்கு ஆதரவாக இருந்தார். அந்த சமயத்தில் இவர் மாலத்தீவு அகராதியைத் தொகுக்க உதவினார்.
மாலத்தீவு கவிதைக்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 1980 ஆம் ஆண்டில் தேசிய அங்கீகார விருது பைசாவுக்கு வழங்கப்பட்டது, பின்னர் 1996 ஆம் ஆண்டில் தேசிய விருதும் வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று இசுகந்தர் பள்ளியின் பொன்விழாவில் பைசா தனது கடைசி கவிதையை எழுதினார்.
பிப்ரவரி 25, 2011 அன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர், தனது 86 வயதில் மாலைதீவு குடியரசின் மாலேயில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் இறந்தார். வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து மசுசித் அல் சுல்தான் மொகமத் தங்குருஃபானு அல் அவுசத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட விழாவில் இவர் மாலே ஆ சகாரா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அகமது அப்பாசு, அமிநாத் அப்பாசு மற்றும் முகமது இல்மி ஆகிய மூன்று குழந்தைகள் பைசாவிற்கு உள்ளனர். எலீனா அகமது அப்பாசு, மோனா அகமது அப்பாசு, மெரினா அகமது அப்பாசு, காசிப் இல்மி, ஆதிப் இல்மி மற்றும் யத்யா இல்மி என்று பைசாவிற்கு ஆறு பேரக்குழந்தைகள் இருக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Famed Maldivian poet Faiza passes away". Haveeru Daily. 2011-02-24 இம் மூலத்தில் இருந்து 2011-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110722223032/http://www.haveeru.com.mv/english/details/35016.