அமினா ஐதாரி
இந்திய சமூக சேவர்
அமினா ஐதாரி (Amina Hydari) என்பவர் ஓர் இந்திய சமுக சேவகர் ஆவார். [2] இவர் ஐதராபாத் இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் அக்பர் ஐதாரியின் மனைவியாவார். 1908 ஆம் ஆண்டு இவருக்கு பொது மக்கள் சேவைக்கான கைசர்-இ-இந்-பதக்கம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் ஐதராபாத்திலுள்ள முசி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது இவர் செய்த சமூகத் தொண்டிற்காக இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற முதலாவது பெண் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 1929 ஆம் ஆண்டு இவர் பெண்கள் ஐதாரி கழகம் [3] என்ற அமைப்பைத் தொடங்கினார். இதேபோல நகரத்தில் மகபூபியா பெண்கள் பள்ளி [4][5] என்ற முதலாவது பெண்கள் பள்ளியையும் இவர் தொடங்கினார். பிரபல வழக்கறிஞரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க அரசியல்வாதியுமான பத்ருதின் தியாப்சி [6] அமினா ஐதாரியின் மாமா என்றும் அறியப்படுகிறது.
அமினா ஐதாரி Amina Hydari | |
---|---|
பிறப்பு | அமினா நச்முதின் தியாப்சி[1] 1878 பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1939 (அகவை 60–61) |
தேசியம் | இந்தியர் |
பணி | சமூக சேவகர் |
வாழ்க்கைத் துணை | அக்பர் ஐதாரி |
பிள்ளைகள் | முகமது சாலெ அக்பர் ஐதாரி உட்பட 7 பேர்; |
உறவினர்கள் | பத்ருதின் தியாப்சி (மாமா) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Roberts, C., ed. (1939). What India Thinks: Being a Symposium of Thought Contributed by 50 Eminent Men and Women Having India's Interest at Heart. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120618800. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017.
- ↑ Sarojini Naidu (25 November 1919). "Indian Women Franchise". The Singapore Free Press and Mercantile Advertiser: p. 4. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/singfreepressb19191125-1.2.9. பார்த்த நாள்: 6 May 2017.
- ↑ "Lady Hydari Club". Massachusetts Institute of Technology. dome.mit.edu. Archived from the original on 6 May 2017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017.
- ↑ Gupta, Priya (23 February 2013). "I've always struggled with my relationship with my father: Aditi". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017.
- ↑ Muneeza Shamsie (September 1995). "Begum Tyabji: the end of an era". Dawn. https://asianstudies.github.io/area-studies/SouthAsia/SAserials/Dawn/1995/07Sp95.html. பார்த்த நாள்: 6 May 2017.
- ↑ Devereux, Mark (7 December 2008). "The Early Tyabji Women". nstyabji.wordpress.com. Archived from the original on 13 May 2009. பார்க்கப்பட்ட நாள் 7 May 2017.