அமினோகுளோரினேற்றம்

வேதி வினை

அமினோகுளோரினேற்றம் (Aminochlorination) என்பது எந்த ஒரு கரிம வேதியியல் தொகுப்பு வினையில் குளோரின் அணு, அமினோ குழு அல்லது அமிடோ குழு இரண்டும் நிறுவப்பட்டு 2-அமினோ ஆல்கைல் குளோரைடு உருவாகிறதோ அந்த வினையைக் குறிக்கும். அமினோகுளோரினேற்ற வினை குறிப்பாக ஆல்க்கீன் அடிமூலக்கூறுகளை குளோரமீன்களுடன் இணைப்பதன் மூலம் பொதுவாக நிகழ்கிறது. ஆல்க்கீனின் மீதுள்ள அமீனை பலேடியம்(II) அயனியால் தூண்டி அணுக்கருநாட்டத் தாக்க வினையும், அதனைத் தொடர்ந்து தாமிரம்(II) குளோரைடைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்ற வினையும் நிகழ்ந்து 2-அமினோ ஆல்கைல் குளோரைடு தயாரிப்பது ஒரு மாற்று தயாரிப்பு முறையாகும். [1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Manzoni, Maria R.; Zabawa, Thomas P.; Kasi, Dhanalakshmi; Chemler, Sherry R. (2004). "Palladium(II)-Catalyzed Intramolecular Aminobromination and Aminochlorination of Olefins". Organometallics 23 (23): 5618–5621. doi:10.1021/om049432z. 
  2. Yin, Guoyin; Mu, Xin; Liu, Guosheng (2016). "Palladium(II)-Catalyzed Oxidative Difunctionalization of Alkenes: Bond Forming at a High-Valent Palladium Center". Accounts of Chemical Research 49 (11): 2413–2423. doi:10.1021/acs.accounts.6b00328. பப்மெட்:27739689. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோகுளோரினேற்றம்&oldid=3713548" இலிருந்து மீள்விக்கப்பட்டது