அமினோபாலிகார்பாக்சிலிக் அமிலம்

வேதிச் சேர்மம்

ஒரு அமினோபாலிகார்பாக்சிலிக் அமிலம் (Aminopolycarboxylic acid) ன்பது (சில நேரங்களில் சுருக்கமாக APCA என அழைக்கப்படுகிறது) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நைட்ரஜன் அணுக்கள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கார்பாக்சில் தொகுதிகளின் கானர்பன் அணுக்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அமில புரோட்டான்களை இழந்த அமினோபாலிகார்பாக்சிலேட்டுகள் உலோக அயனிகளுடன் வலுவான அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன. இந்தப் பண்பு அமினோபாலிகார்பாக்சிலிக் அமிலங்களை பலவிதமான வேதியியல், மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகளில் பயனுள்ள அணைவுச்சேர்மமாக மாற்றுகிறது. [1]

EDTA எதிரயனியுடன் ஒரு உலோக அணைவுச் சேர்மம்
கிளைசினேட் அயனி ஒரு உலோக அயனியுடன் இடுக்கி அணைவு சேர்மத்தை உருவாக்க முடியும்
அஸ்பார்டிக் அமிலம் ஒரு அமினோடைகார்பாக்சிலிக் அமிலம் மற்றும் பிற ஈந்தணைவிகளுக்கு முன்னோடியும் ஆகும்.

அமைப்பு

தொகு

இந்த ஈந்தணைவி குடும்பத்தின் தாய் சேர்மமாக அமினோ அமிலமான கிளைசின், H2NCH2CO2H உள்ளது. இதில் அமினோ தொகுதியானது, (NH2) கார்பாக்சில் தொகுதியிலிருந்து, (CO2H) ஒற்றை மெத்திலீன் (CH2) தொகுதியால் பிரிக்கப்பட்டுள்ளது. கார்பாக்சில் தொகுதியானது புரோட்டானிறக்கத்திற்குட்படும் போது கிளைசினேட்டு அயனியானது ஒரு இரு அணுக்கள் மூலம் இணையும் ஈந்தணைவியாக செயல்பட முடியும். இத்தகயை ஈந்தணைவியானது, மைய உலோக அயனியை நைட்ரஜன் மற்றும் இரண்டு கார்பாக்சிலேட் ஆக்சிஜன் அணுக்களில் ஒன்று மூலமாக இணைத்து உலோக அயனிகளின் இடுக்கி அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Anderegg, G.; Arnaud-Neu, F.; Delgado, R.; Felcman, J.; Popov, K. (2005). "Critical evaluation of stability constants of metal complexes of complexones for biomedical and environmental applications* (IUPAC Technical Report)". Pure Appl. Chem. 77 (8): 1445–1495. doi:10.1351/pac200577081445. 
  2. Schwarzenbach, G (1952). "Der Chelateffekt". Helv. Chim. Acta 35 (7): 2344–2359. doi:10.1002/hlca.19520350721.