அமினோமெத்தில் குழு

வேதி வினைக்குழு

அமினோமெத்தில் குழு (Aminomethyl group) என்பது −CH2−NH2 அல்லது −CH4N என்ற வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள ஓர் ஒற்றை இணைதிற வேதி வினைக்குழுவாகும். −CH2− என்ற மெத்திலின் பாலமானது ஒற்றைப் பிணைப்பால் அமீன் குழுவுடன் (−NH2) சேர்ந்திருப்பது அமினோமெத்தில் குழு என விவரிக்கப்படுகிறது. −(CH2−)nNH2 என்ற 1-அமினோ ஆல்கைல் குழு தொடர் வரிசையில் அமினோமெத்தில் குழுவும் ஒரு வரிசையாகும். [1] 4-(அமினோமெத்தில்) பென்சாயிக் அமிலம் போன்ற சில சேர்மங்களின் செந்தர ஐயுபிஏசி பெயரில் அமினோமெத்தில் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Erwin Von Angerer, Norbert Knebel, Mario Kager, and Bernhard Ganss (1990): "1-(aminoalkyl)-2-phenylindoles as novel pure estrogen antagonists". Journal of Medicinal Chemistry, volume 33, issue 9, pages 2635–2640. எஆசு:10.1021/jm00171a045
  2. Ursula Bünzli-Trepp (2007): Systematic Nomenclature of Organic, Organometallic and Coordination Chemistry: Chemical-Abstracts Guidelines with IUPAC Recommendations and Many Trivial Names. EPFL Press, 636 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420046151
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோமெத்தில்_குழு&oldid=3028722" இலிருந்து மீள்விக்கப்பட்டது