அமீன்

அமோனியாவிலிருந்து வருவிக்கப்படும் கரிம வேதியியல் சேற்மம்
முதன்மை
அமீன்
இரண்டாம் நிலை
அமீன்
மூன்றாம் நிலை
அமீன்

அமீன்கள் (Amines) என்பவை கரிம வேதியியலில் காணப்படும் வேதி வினைக்குழுக்களில் ஒன்றாகும் [1][2] also UK: /ˈmn/)[3]. இதில் ஒரு நைட்ரசன் அணு ஓரு தனி இணை எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது. அமீன்கள் பொதுவாக அமோனியாவிலிருந்து தருவிக்கப்படும் வழிப்பொருள்கள் ஆகும். அமோனியாவிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்கள் ஆல்கைல் அல்லது அரைல் குழுக்களால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும் [4]. இவற்றை முறையே ஆல்கைலமீன்கள் மற்றும் அரைலமீன்கள் என்று அழைப்பர். இவ்விரண்டும் ஒரே சேர்மத்தில் இணைக்கப்பட்டிருந்தால் அதை ஆல்கைலரைல் அமீன்கள் என்பர். அமினோ அமிலங்கள். உயிரிவழி அமீன்கள், டிரைமெத்திலமீன், அனிலீன் உள்ளிட்டவை சில முக்கியமான அமீன்களாகும். குளோரமீன் போன்ற அமோனியாவின் கனிம வேதியியல் வழிப்பொருள்களும் அமீன்கள் என்றே கருதப்படுகின்றன[5]>.

நைட்ரசன் அணு கார்பனைல் குழுவுடன் இணைக்கப்பட்டு R–CO–NR′R″ என்ற கட்டமைப்பைப் பெற்றிருந்தால் அவ்வகை சேர்மங்கள் அமைடுகள் எனப்படுகின்றன. இவை அமீன்களில் இருந்து வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளன.

அமீன்களின் வகைப்பாடு

தொகு

அலிபாட்டிக் அமீனில் நைட்ரசன் அணுவுடன் அரோமாட்டிக் வளையங்கள் எதுவும் நேரடியாக இணைக்கப்படவில்லை. ஆனால் அரோமாட்டிக் அமீன்களில் நைட்ரசன் அணுவுடன் ஓர் அரோமாட்டிக் வளையம் பல்வேறு அனிலீன்களில் இணைந்திருப்பதைப் போல இணைந்திருக்கிறது. இந்த அரோமாட்டிக் வளையம் அதனுடன் இணைந்துள்ள பதிலிக்கு ஏற்ப அமீனுடைய காரத்தன்மையைக் குறைகிறது. அங்கு ஓர் அமீன் குழு இருக்க நேர்ந்தால் எலக்ட்ரான்-நன்கொடை விளைவின் காரணமாக, அரோமாட்டிக் வளையத்தின் வினைத்திறன் அதிகரிக்கிறது.

அமீன்கள் நான்கு துணை வகைகளாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

  • முதல்நிலை அமீன்கள்:

அமோனியாவில் இருக்கும் மூன்று ஐதரசன் அணுக்களில் ஒன்று ஆல்கைல் அல்லது அரோமாட்டிக் குழுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு உருவாகும் அமீன்கள் முதல்நிலை அமீன்கள் எனப்படும். மெத்திலமீன், பெரும்பாலான அமினோ அமிலங்கள், தாங்கல் முகவரான டிரிசு அனிலீன் உள்ளிட்டவை முதல்நிலை அமீன்களாகும்.

  • இரண்டாம்நிலை அமீன்கள் :

ஆல்கைல், அரைல் அல்லது இரண்டும் என அமோனியாவில் உள்ள இரண்டு நைட்ரசன் அணுக்களுக்குப் பதிலாக ஐதரசன் இணைந்துள்ள நைட்ரசன் அணுவுடன் பிணைந்து உருவாகும் அமீன்கள் இரண்டாம்நிலை அமீன்கள் எனப்படும். டைமெத்திலமீன், டைபீனைலமீன் இரண்டும் இரண்டாம்நிலை அமீன்களுக்கு எடுத்துக் காட்டாகும்.

  • மூன்றாம்நிலை அமீன்கள்:

அமோனியாவில் உள்ள மூன்று ஐதரசன்களும் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அதற்குப் பதிலாக மூன்று பதிலீடுகள் பிணைக்கப்பட்டு உருவாகும் அமீன்கள் மூன்றாம்நிலை அமீன்கள் ஆகும். டிரைமெத்திலமீன், எத்திலீன்டையமீன்டெடராஅசிட்டிக் அமிலம் ஆகியன் மூன்றாம்நிலை அமீன்களாகும்.

  • வளைய அமீன்கள்:

இவை இரண்டாம்நிலை அல்லது மூன்றாம்நிலை அமீன்களில் ஒன்றாக இருக்கலாம். மூன்று உறுப்பினர் வளையமான அசிரிடின் மற்றும் ஆறு உறுப்பினர் வளையமான பிப்பெரிடின் ஆகியவை வளைய அமீன்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். மெத்தில் பிப்பெரிடினும் பீனைல்பிப்பெரிடினும் மூன்றாம்நிலை வளைய அமீன்களுக்கு எடுத்துக்காட்டாகும். நைட்ரசனுடன் நான்கு கரிமக் குழுக்கள் பதிலீடு செய்யப்பட்டு உருவாகும் சேர்மங்களும் சாத்தியமே. இவை அமீன்கள் அல்ல. ஆனால் அவை நான்காம்நிலை அமோனியம் நேர்மின் அயனிகள் எனப்படுகின்றன. இதில் மின்சுமையுடன் கூடிய நைட்ரசன் மையம் உள்ளது. நான்காம்நிலை அமோனியம் உப்புகள் பலவகையான எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளன.

பெயரிடல்

தொகு

அமீன்களுக்கான பெயர்கள் பல்வேறு முறைகளில் வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஓர் அமீன் சேர்மத்திற்கு முன்னொட்டு அமினோ அல்லது பின்னொட்டு அமீன் சேர்க்கப்படுகிறது. பதிலீடு நைட்ரசன் அணுவின் மீது செய்யப்பட்டிருந்தால் அதைக் குறிப்பிட முன்னொட்டு "N-" பெயருடன் சேர்க்கப்படுகிறது. ஒரு கரிமச் சேர்மத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமினோ குழுக்கள் இடம் பெற்ரிருந்தால் அவற்றை டையமீன், டிரையமீன், டெட்ரா அமீன் என பெயரிடுதல் தொடர்கிறது. சில அமீன்களுக்கு திட்டத்தின் அடிப்படையிலான பெயர்கள் வருமாறு:

Systematic names for some common amines:

கீழ்நிலை அமீன்கள் பின்னொட்டு அமீன் உடன்

 
மெத்திலமீன்

உயர் அமீன்கள் முன்னொட்டு அமினோ உடன் [மேற்கோள் தேவை], அமினோ பெண்டேன்

 
'2-அமினோ பெண்டேன்)

இயற்பியல் பண்புகள்

தொகு

ஐதரசன் பிணைப்பின் செல்வாக்கு அமீன்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் பிரதிபலிக்கிறது. இதனால் தொடர்புடைய பாசுபீன்களைக் காட்டிலும் உருகுநிலை கொதிநிலை அதிகமாகவும், ஆனால் தொடர்புடைய ஆல்ககால்கள், கார்பாக்சிலிக் அமிலங்களை விட குறைவாகவும் உள்ளது. உதாரணமாக சாதாரண வெப்பம் மற்றும் அழுத்தத்தில் மெத்தில் மற்றும் எத்தில் அமீன்கள் வாயுக்களாகும். ஆனால் தொடர்புடைய மெத்தில் மற்றும் எத்தில் ஆல்ககால்கள் நீர்மங்களாகும். அமீன்கள் பொதுவாக அமோனியாவைப் போல காரநெடி உடையவையாகும். ஆனால் நீர்ம அமோனியா மீனின் வாசனை கொண்டதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:AHDict
  2. "Amine definition and meaning". Collins English Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
  3. "amine - definition of amine in English". Oxford Dictionaries. Archived from the original on 2015-02-23. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
  4. வார்ப்புரு:McMurray3rd
  5. Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2000). "Amines, Aliphatic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீன்&oldid=3607527" இலிருந்து மீள்விக்கப்பட்டது