அமிர்தபுரி

இந்தியாவில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் பறையகடவு என்ற கடற்கரை கிராமம் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படுகின்றது. உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் ஆன்மீக பெண் துறவி சற்குரு மாதா அமிர்தானந்தமாயி அவர்களின் ஆசிரமம் இங்கு அமைத்துள்ளது. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் வருகைதரும் பயணத் தலமாக, புனிதத்தலமாக இது விளங்குகிறது.[1]

அமிர்தபுரி ஆசிரமம்

இந்த கிராமத்தில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் என்ற புகழ்பெற்ற பல வளாகங்கள் கொண்ட பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமும் உள்ளது.[2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தபுரி&oldid=3324057" இருந்து மீள்விக்கப்பட்டது