அமிலக் காப்புறை
அமிலக் காப்புறை ( Acid mantle) என்பது மனித தோலின் மேற்புறத்தில் காணப்படும் மிகநுண்ணிய சற்று அமிலத்தன்மை கொண்ட மென்படலமாகும் [1]. பாக்டீரியா , வைரசு மற்றும் தோலில் ஊடுருவிச் செல்லும் சாத்தியமுள்ள எல்லா நுண்ணுயிரிகளையும் இப்படலம் தடுத்து நிறுத்துகிறது. தோலில் காணப்படும் கொழுப்புச் சுரப்பிகள் இப்படலத்தைச் சுரக்கின்றன. தோலின் pH 4.5 மற்றும் 6.2 என்ற அளவில் சற்று அமிலத்தன்மையுடன் இருக்கும்[2][3]. இரத்தத்தின் pH 7.4 என்ற அளவில் காரத்தன்மையுடன் உள்ளது. தோலின் கார அமிலத் தன்மைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்ட நோயுண்டாக்கும் பாக்டீரியாவால் உட்புறத் திசுக்களைச் சென்றடைய இயல்கிறது. பின்னர் அது குறைவான தகவமைப்புள்ள சூழலின் மீது எதிர்ப்பை காட்டத் தொடங்குகிறது. வெளிப்புற அமிலத்தன்மையும், உட்புற காரத்தன்மையும் நோயுண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து உடலைப் பாதுகாக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Monika-Hildegard Schmid-Wendtner; Korting Schmid-Wendtner (2007). Ph and Skin Care. ABW Wissenschaftsverlag. pp. 31–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-936072-64-8. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
- ↑ Zlotogorski A (1987). "Distribution of skin surface pH on the forehead and cheek of adults". Arch. Dermatol. Res. 279 (6): 398–401. doi:10.1007/bf00412626. பப்மெட்:3674963.
- ↑ "The concept of the acid mantle of the skin: its relevance for the choice of skin cleansers". Dermatology (Basel) 191 (4): 276–80. 1995. doi:10.1159/000246568. பப்மெட்:8573921. http://www.sebamed.com/fileadmin/user_upload/pdf/Studien/Saeuremantelkonzept/1.05.pdf. பார்த்த நாள்: 2017-01-17.