காரகாடித்தன்மைச் சுட்டெண்

காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) என்பது ஒரு கரைசலின் தன்மையை அமிலமா அல்லது காரமா என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள ஐதரசன் (நீர்வளி) அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.

காரகாடித்தன்மைச் சுட்டெண்னின் வேதியியல் வரையறை, "ஐதரசன் அயனிகளின் எதிர்மறையான மடக்கை ஆகும்".

இங்கு aH - ஐதரசன் அயனிகள்.

காரகாடித்தன்மைச் சுட்டெண் 0ல் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 °Cல் 7.0 ஆகும், இதை நடுநிலை என்று அழைக்கப்படுகிறது. ஏதேனும் கரைசலில் 7.0 க்கும் கீழ் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் அமிலமாகவும், அல்லது கரைசலில் 7.0 க்கும் மேல் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது.

காரகாடித்தன்மைச் சுட்டெண் கண்டறிதல் மருத்துவம், உயிரியல், வேதியியல், உணவு அறிவியல், சூற்றுப்புறச்சூழல் அறிவியல், கடலியல் போன்ற துறைகளில் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்.

அமிலகாரக் காட்டிகள் தொகு

அமிலத்தில் ஒரு நிறத்தையும் காரத்திற்கு வேறொரு நிறத்ததையும் காட்டும் பொருட்கள் அமிலகாரக் காட்டிகள் எனப்படும்.

பாசிச்சாயத்தாள் (Litmus) தொகு

 
பாசிச்சாயத்தாள்
  • நீலப்பாச்சாயத்தாளை சிவப்பாகமாற்றுவது அமிலம்
  • சிவப்புப் பாசிச்சாயத்தாளை நீலமாக மாற்றுவது காரம்

காட்டிப்பதார்த்தங்கள் தொகு

காட்டிகள் இழிவு pH நிறம் மாறும் pH வீச்சு உயர் pH நிறம்
மீதைல் நாவல் மஞ்சள் 0.0–2.0 நீலம் - நாவல்
லியூகோ மலசிற் பச்சை (first transition) மஞ்சள் 0.0–2.0 பச்சை
லியூகோ மலசிற் பச்சை (second transition) பச்சை 11.6–14 நிறமில்லை
தைமோல் நீலம் (first transition) சிவப்பு 1.2–2.8 மஞ்சள்
தைமோல் நீலம்(second transition) மஞ்சள் 8.0–9.6 நீலம்
மீதைல் மஞ்சள் சிவப்பு 2.9–4.0 மஞ்சள்
புரொமோ பீனோல் நீலம் மஞ்சள் 3.0–4.6 ஊதா
காங்கோ சிவப்பு நீலம் - நாவல் 3.0–5.0 சிவப்பு
மீதைல் செம்மஞ்சள் சிவப்பு 3.1–4.4 செம்மஞ்சள்
புரோமோ கிறிசோல் பச்சை மஞ்சள் 3.8–5.4 நீலம்
மீதைல் சிவப்பு சிவப்பு 4.4–6.2 மஞ்சள்
மீதைல் சிவப்பு சிவப்பு 4.5–5.2 பச்சை
பாசிச்சாயத்தாள் சிவப்பு 4.5–8.3 நீலம்
புரோமோ சிறிசோல் ஊதா மஞ்சள் 5.2–6.8 ஊதா
புரோமோதைமோல் நீலம் மஞ்சள் 6.0–7.6 நீலம்
பீனோல் சிவப்பு மஞ்சள் 6.8–8.4 சிவப்பு
நப்தோப்தலின் செங்கன்னிறம் 7.3–8.7 நீலப்பச்சை
கிறிசோல் சிவப்பு மஞ்சள் 7.2–8.8 செவ்வூதா
பினோப்தலின் நிறமிலி 8.3–10.0 fuchsia
பினோப்தலின் நிறமிலி 9.3–10.5 நீலம்
பாசிச்சாயத்தாள் சிவப்பு 4.5-8.3 நீலம்

அமில காரக் காட்டிகளாகும் இயற்கைப் பொருட்கள் தொகு

  1. பாக்குச்சாறு: சுண்ணாம்புடன் சேர்ந்து சிவப்பு நிறமாக மாறுதல்.
  2. கறிமஞ்சள்: சவர்க்காரத்துக்கு சிவப்பு நிறமாக மாறுதல்.
  3. மருதோண்டி இலைச்சாறு : தேசிப்புளிக்கு சிவப்பாக மாறுதல்