காங்கோ சிவப்பு
காங்கோ சிவப்பு (Congo red) (மூலக்கூறு வாய்பாடு: C32H22N6Na2O6S2 ) என்பது இரண்டாம் நிலை டை அசோ சாயம். இது நீரில் கரைந்து சிவப்பு நிறக் கூழ்மத்தைத் தரும். கரிமக்கரைப்பான்களில் நன்கு கரையும்.
உயிர்வேதியியல் மற்றும் திசுவியல் துறையில் இச்சாயம் கொழுப்பு மற்றும் அமைலாய்டு ஆகியவற்றைச் சாயமேற்றப் பயன்படுத்தப்படுகிறது.